Sunday, November 20, 2011

கமலுக்கு ஜோடி கிடைச்சாச்சு...!


American, Indian Actress Pooja Kumar
விஸ்வரூபம் படத்தில் பொருத்தமான ஹீரோயின் கிடைக்காததால், கதாநாயகி இல்லாமலேயே ஷூட்டிங்கைத் தொடங்கி பாதி முடித்துவிட்ட கமலுக்கு ஒருவழியாக ஜோடி கிடைத்துவிட்டது.

ஹீரோயின் பெயர் பூஜா குமார். நியூயார்க்கில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். சில ஆங்கிலப் படங்கள், இந்திப் படங்களிலும் தலைகாட்டியுள்ளாராம்.

பஞ்சாபைச் சேர்ந்த இவர் பிரபலமான மாடலும் கூட.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்து, படம் தாமதமானதால் விலகிக் கொண்டார். பின்னர் அனுஷ், ஸ்ரேயா என பலரும் வந்தார்கள், போனார்கள்.

இதனால் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமலேயே படப்பிடிப்பைத் தொடர்ந்தார் கமல்.

இப்போது மும்பை பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பூஜா குமார் என்ற என் ஆர் ஐ பெண்ணை விஸ்வரூபம் படத்தில் நாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அவருக்கு அமையும். நல்ல திறமையான நடிகை," என்று கூறியுள்ளார்.

இந்த பூஜா குமார் யார் என்பதை இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லையா...

12 ஆண்டுகளுக்கு முன், தமிழில் 'காதல் ரோஜாவே' என்றொரு படம் வந்தது நினைவிருக்கிறதா... கேயார் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்தவர்தான் இந்த பூஜா குமார்