Tuesday, November 8, 2011

7 am Arivu !! Review !!!!!!!!



சூர்யா - சீன குரு போதி தர்மா/அர்விந்த்
ஸ்ருதி ஹாசன் - சுபா
ஜானி டிரை நூயென் - டாங் லீ
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து இயக்கம் - A.R.முருகதாஸ்
தயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின்
வெளியீடு - ரெட் ஜெயின்ட் மூவீஸ்
விக்கி என்ன சொல்லுதுன்னா Inception, Chandni Chowk to China(Hindi), Perfume படங்கள உருவித்தான் இந்த ஏழாம் அறிவு வந்திருக்குன்னு. ஆனா முருகதாஸ் சொல்றாரு “நான் எந்த ஹாலிவுட் படத்தையும் காப்பி அடிக்கல, வேணும்னா நீங்க இந்தப் படத்தை ஹாலிவுட்டுக்கு காப்பி அடிச்சுக்கோங்கன்னு. இந்தப் பய தமிழ்நாட்டுலதான் ஓவரா வாய் பேசுறான்னு நினைச்சேன். ஆனா எல்லாருகிட்டயும் அப்படிதான் போல.
தம்பி நீ தமிழ் டைரக்டரா இருந்து ஒரே ஒரு ஹிந்தி படம்தானே எடுத்தே? அதுக்கே ஏன்டா இவ்ளோ சவுன்டு? படத்தோட முதல் 20 நிமிசத்துக்காக 15 கோடி செலவு பண்ணி எடுத்தாங்களாம். வொர்த்துதாம்பா. ஆனா அது மட்டும்தான் படமே. அது முடிஞ்சதுமே நீங்க வீட்டுக்கு கெளம்பி வந்திரலாம் :P
1600 வருடங்களுக்கு முன்புனு சொல்லி, தமிழ்நாட்டுல பல கலைகளிலும் கைதேர்ந்த குரு போதி தர்மா, தன்னோட குருவின் வேண்டுதலுக்காக சீனாவை நோக்கிப் புறப்படுறாரு. 3 வருஷமா குதிரையிலேயே போய் சீனாவை அடையுறாரு. அங்க அவரை ஒரு தீய சக்தினு முதல்ல நினைச்சாலும், சீனாவுல பரவி வந்த ஒரு கொடிய நோய்க்கு மருந்து கொடுத்து குணப்படுத்தி தமிழன்டானு கெத்து காட்டுறாரு. அது மட்டுமா, அடுத்து அவருக்கு தெரிஞ்ச ஹிப்னாடிசம், கராத்தே மூலமா சீன மக்களை காப்பாத்துறதோட மட்டுமில்லாம, அந்த மக்களுக்கு அதைக் கத்துக் கொடுக்கவும் செய்யுறாரு. அவரு அப்புறம் இந்தியா வரல. அந்த மக்கள் கேட்டுகிட்டதுக்காக அங்கயே தன்னோட உயிரை விட்டாரு. அவரோட நினைவாதான் இப்போவும் அங்க Shaolin temple இருக்கு. ( நம்ம விநய்தான் அதிகமா ஜென் கதைகள் எழுதிருக்காரு. ஒருவேளை இவரு அவரோட பரம்பரையோ. அவரோட டி.என்.ஏ வ டெஸ்ட் பண்ணி பாக்கணும்)
இது நிச்சயமா தமிழர்கள் பெருமைப் பட வேண்டிய, கர்வப்பட வேண்டிய விஷயம்தான். ஆனா இது எத்தனை தமிழர்களுக்கு தெரியும்னு சர்வே எடுக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர். முருகு தம்பி நீங்க எப்போ இதைத் தெரிஞ்சுகிட்டீங்கன்னு சொல்லவேயில்ல பார்த்தீங்களா?
 எனக்கு எங்க தாத்தாவோட தாத்தா பேரே தெரியாது. 6ம் நூற்றாண்டுல ஆன்சைட் போன இந்த குருவப் பத்தி கேட்டா எப்படி? ஒரு வேலை வரலாறு பட்டப்படிப்பு படிச்சிருந்தா தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. சரி இப்போ தமிழனை பெருமைப் படுத்தியாச்சா, அடுத்து படம் எப்படி கொண்டு போறது?
அங்கதான் ட்விஸ்ட்டே. இவ்ளோ நாளா எல்லா படத்துலயும் பாகிஸ்தான் தானே நம்மள அழிக்க ஆசைப்படுறதா காட்டினாங்க. இவரு சீனாக்காரங்க அழிக்கப் போறதா காட்டுறாரு. அதுவும் பயோ வார் மூலமா. பயோ வார் பத்தி மொதல்லயே ‘ஈ னு ஒரு படம் வந்து யாருமே கண்டுக்காம போய்டுச்சு. இப்போ இவரு கொஞ்சம் பிரம்மாண்டமா காமிச்சிருக்காரு. இதுவாவது மக்களுக்கு புரியுமா? :roll: அந்த பயோ வார் கிருமிய இங்க பரப்பிட்டா, அதுக்கு மருந்து சீனாக்காரங்ககிட்ட மட்டும்தான் இருக்கும். அப்போ அவன் சொல்றததானே கேப்போம்னு நினைப்பு.
அந்த மருந்தோட சூத்திரத்தை அவங்களுக்கு சொன்னதே நம்ம குரு போதிதர்மாதான். அதே சமயம், முன்னோர்களோட டி.என்.ஏ இப்போ இருக்குறவங்களுக்கு ஒத்துப்போச்சுன்னா,அந்த டி.என்.ஏ வுல ஏதோ செஞ்சு முன்னோர்களோட அதே புத்தி, அவங்களோட திறமைலாம் கொண்டுவந்திரலாம்னு (காதுல பூ) ஒரு ஆராய்ச்சி பண்றாங்க சுபா(ஸ்ருதி).
இப்போ நம்மாளு அர்விந்த்(சூர்யா) என்ட்ரி. அவருதான் போதிதர்மா வம்சம். சர்க்கஸ்ல வேலை பாக்குறாரு. அவரோட டி.என்.ஏ போதி தர்மாவோட ஒத்துப் போறதால அவருக்கு வயர் மாட்டி, ஷாக் கொடுத்து, சோப்புத்தண்ணில ரெண்டு நாள் ஊற வெச்சோம்னா போதி தர்மாவா வந்திருவாருனு அவர் சுபாவ ஃபாலோ பண்ண வெக்கிற மாதிரி காமிச்சாலும்,நிஜமா சுபாதான் அர்விந்த் பின்னாடி சுத்துறாங்க. இந்த ஆராய்ச்சி வெற்றியடைஞ்சா சைனா கிட்ட நாம மருந்து கேக்க வேணாம் நம்ம புது போதி தர்மாவே கண்டுபிடிச்சிருவாரு. அதனால ஸ்ருதியையும், அர்விந்தையும் கொல்லணும், அப்டியே சொறிநாய் மூலமா வைரஸ் பரப்பி பயோ வார் ஸ்டார்ட் பண்ணனும்(ஆபரேசன் ரெட்). அதுக்காகத்தான் டாங் லீ - வில்லன் இந்தியா வர்றாரு. இப்போ ஆபரேசன் ரெட் என்னாச்சு? அர்விந்த் போதி தர்மா ஆனானா? ஸ்ருதி பொண்ணு என்ன ஆனா? அதுதான் நம்ம முருகதாஸ் எடுத்த ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட வேண்டிய, கர்வப்பட வேண்டிய “ஏழாம் அறிவு :P
சூர்யா - உன்ன குத்தம் சொல்ல முடியாது தம்பி. உன்னோட கேரக்டர் அப்டி. கதை கூட நல்ல கதைதான், அதனால அதை செலக்ட் பண்ணதுக்கும் ஒண்ணும் சொல்ல முடியாது. திரைக்கதைல சொதப்பினது முருகுவோட தப்பு. அவன பின்னாடி கவனிச்சுக்கிறேன். சூர்யா நடிப்பு, டான்ஸ், சென்டிமென்ட், ஆக்ரோசம்னு அவனோட வேலைய கரெக்ட்டா பண்ணிட்டான்பா. ஒத்துக்குறேன், நீ சிக்ஸ் பேக் வெச்சிருக்கேனு ஒத்துக்கிறேன். அதுக்காக எல்லா பாட்டுலயும் சட்ட போடாமதான் ஆடுவேன்னு அடம் பிடிச்சா எப்படிப்பா?
ஸ்ருதி - உலகநாயகன் பரம்பரை. அம்மணி நல்லாதான் இருக்கு. என்ன கொஞ்சம் உடம்பு வந்தா நல்லா இருக்கும். சப்பிப் போட்ட ஐஸ் குச்சி மாதிரி இருக்கு. (அடேய்  அதெல்லாம் அவள கட்டிக்கப் போறவன் கவலைப் படவேண்டிய விஷயம். உன்ன கட்டிக்கப் போறவ இதைப் படிச்சா அடுத்த தடவ பார்க்கும் போது அடி விழும்டா. டாபிக்க மாத்து). பொண்ணு நல்லா பாடுது. டான்ஸ் போக போக கத்துக்கலாம்தான். நடிப்பு - அப்பாகிட்ட டியூசன் போலாமே நீங்க. நீங்க நல்லா rap song லாம் பாடறீங்க சரி. உங்க குரல்லயே கண்டிப்பா ‘தெமில்ல பேசணுமா? ஏன்யா முருகு, மத்ததுக்கெல்லாம் கோடி கோடியா செலவு பண்ணியே இந்தப் பொண்ணுக்கும், காமெடியன் பக்ரூக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு ஒரு 5000 செலவு பண்ணிருக்கக் கூடாதா? பக்ரூ பேசுற மலையாளத்தமிழ், டப்பிங் பட எஃபெக்ட் கொடுக்குது. ஸ்ருதி ஒரு சீன்ல இங்க்லிஷ விட தமிழ் ஒண்ணும் கொறைஞ்சது இல்லனு உணர்ச்சிகரமா பேசுறது, டயலாக்லாம் நல்லா இருந்தாலும் அவங்களோட சொந்தக் குரல்ல அதுவும் ‘ஏய் தெமில்னா உன்க்கு அவ்லோ கேவ்லாமா?’னு பேசும் போது பொங்குன உணர்ச்சி புஸ்ஸுனு ஆயிடுச்சு :(. அம்மணி கௌதமி அம்மாவ விசாரிச்சேன்னு சொல்லுங்க.
இசை - ஹாரிஸ் ஜெயராஜ் - இவரோட திறமை யாருக்குமே வராதுங்க. எல்லாரும் மத்தவங்களோட மியூசிக்கதானே திருடுவாங்க, இவரு இவரோட பழைய மியூசிக்கையே திருடி புதுசு மாதிரியே கொடுப்பாரு. முன் அந்திச் சாலையில்தான் ஓகே ரகம். அதுவும் பல பாட்டுல பார்த்துப் பழகின பழைய லொகேசன்ஸ் மாதிரியேதான் ட்யூனும். ஓ ரிங்கா ரிங்கா’ - 1000 சைட் டான்ஸர்ஸ் வெச்சு ஆட வெச்ச பிரம்மாண்டம் மட்டுந்தான். ஏலே லமாகண்ணுக்கு குளு குளு, காதுல குறு குறு. இன்னும் என்ன தோழா?’ விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரு பாட்டுல பெரிய ஆள் ஆகுற பாடல். யம்மா யம்மா’ - கபிலனின் வரிகள் நல்லா இருக்கு. ஆன எங்க தாத்தா கேட்டா சொல்லுவாரு, என்னடா இவ்ளோ பழைய பாட்டு கேக்க சொல்றனு. அப்புறம் அந்த சைனீஸ் பாட்டு. அது என்னமோ மதன் கார்க்கி எழுதிந்தந்த அழகான சீனக் கவிதைனு சொல்லிக்கிறாங்க. சைனீஸ் தெரிஞ்சவங்க டிரன்ஸ்லேட் பண்ணினா, உண்மையா பொய்யானு கண்டுபிடிக்கலாம். என்னது BG musicபத்தி சொல்லணுமா? அது படத்துல இருக்கானு நீங்க சொல்லுங்க, அப்புறம் அதைப் பத்தி நான் சொல்றேன்.
முருகதாஸ் - தம்பி உன்கிட்ட நிறைய கேக்கணும். வா இப்படி வந்து உக்காரு. ஆமா என்ன ம** படம் எடுத்து வெச்சிருக்கேனு, எல்லா பேட்டிலயும் அப்படி வாய விட்டிருக்க? இல்ல தெரியாமதான் கேக்குறேன். குரு போதிதர்மாவைப் பத்தி தெரிஞ்சுகிட்டோம் சந்தோஷம். பெருமைப் படுறோம். அது முதல் 20 நிமிசம். அப்புறம் 2 மணி நேரம் என்னதான்யா பண்ணிருக்கே? கதை நல்லாதானே யோசிச்சே, அதை ஒழுங்காதான் எடுத்து தொலைச்சிருக்கலாம்ல? யாருமே இப்போ சர்க்கஸ் பார்க்கிறது இல்ல, போய் பாருங்கனு சொல்றியா? இல்ல அரச குடும்பத்துல வாழ்ந்தவங்கலாம் இப்போ சர்க்கஸ்ல வேலை செய்யுறாங்கன்னு சொல்றியா? போதி தர்மா வோட கதைய சொல்லி முடிச்சதுமே கொஞ்சம் கொஞ்சமா கொட்டாவி வர வெச்சு, ‘யம்மா யம்மா பாட்டுல தாலாட்டு பாடி தூங்கவே வெச்சிட்டியே? அந்தப் பாட்டுக்கு 1.5 கோடில செட் போட்டியாமே? ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல லாம் பெசன்ட் நகர்லதான் எடுத்தாங்க. காதல் சோகம்னா அது சோகம். இதுல என்னமோ சிரிச்சுகிட்டே  ரொமான்டிக் லுக்ல சூர்யா பாடுறான்? பாட்டுக்கு பிரம்மாண்டமா செலவு பண்ணிட்டா ஹிட் ஆகிடாது தம்பி. இதே ஹாரிஸ்தான் அதுக்கும் மியூசிக், ஆனா க்ளிக் ஆகலியேப்பா.
நாக்க மடிச்சு டப்பிங் பேசினா அதுதான் சைனீஸ் இங்க்லீஸா What an idea murugu ji? ஆமா வில்லனுக்கு கக்கத்துலயும், கால் சந்துலயும் கட்டி வந்திருச்சா? ஏன் அப்படி ரோபோ மாதிரி நடக்க விட்ருக்க? அட பயோ வார் ஆரம்பிக்க வேற எதுவுமே கிடைக்கலையா?சொறிநாய்லேர்ந்துதான் பரப்பணுமா? இலங்கைதமிழர்கள் யுத்தம் பத்தின டயலாக்குக்கு பாராட்டுறேன். ஆனா நீயும் அதை கமர்சியல் ரேட்டிங் ஏத்தணும்னுதானே உள்ள நுழைச்சிருக்க? அந்த மக்களுக்காக என்ன பண்ணப் போறதா உத்தேசம் செகன்ட் ஹால்ஃப்ல சிறுசேரில எடுத்த அந்த ஃபைட்டு. அத நீதானே சூட்டிங் எடுத்த. அப்புறமும் எப்படிடா கூச்சப்படாம அப்படி பேட்டி குடுக்குற? ஹிப்னாடிசம்னா என்னனு 2 நிமிசம் விக்கில படிச்சு பார்த்திருக்கலாம் நீ. சரி விடு படத்துல காமெடி இல்லனு யாரும் சொல்லிட கூடாதுல. அப்புறம் அர்விந்த போதி தர்மனா மாற்றம் பெற வெக்கிற காட்சி. அதான் Hollow man, Avatar லேர்ந்து காப்பி அடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேல. முழுசாதான் காப்பி அடிக்கிறது. அதுவும் அரை குறை. அதனால கரன்ட் ஷாக், சோப்புத்தண்ணில ஊறப் போடுறதுனு   அதுவும் காமெடியாப் போச்சு பாரு இப்போ. 12 நாள் ஒருத்தன பெட் ரெஸ்ட்ல ட்ரிப்ஸ் மட்டும் கொடுத்து வெச்சிருந்தா அர்விந்தா இருக்கிறவன் போதி தர்மாவா ஆக முடியாது. பேதி தர்மனா வேணும்னா ஆகலாம். தாடி வெச்சு காவி கட்டினா போதி தர்மா,டிஷர்ட் போட்டு ஸ்பைக் வெச்சா அர்விந்த். சப்பையா மேக்-அப் மேன்லயே முடிச்சிருக்கலாம் நீ.  க்ளைமாக்ஸ் ஃபைட்தான் செம ஹைலைட். பார்த்த அத்தனை தமிழனுமே ரொம்ப பெருமைப் பட்டுட்டோம். அர்விந்த் போதி தர்மனா மாறினாலும் மாறலனாலும், 6ம் நூற்றாண்டுல இருந்த அந்த மூலிகைலாம் இருக்குமா இப்போவும்? சரி விடு தமிழ்ல படம் எடுத்தேங்கிறதுக்காக லாஜிக்லாம் பாக்கல. 
படம் முடியும் போது வந்து மூஞ்சிய காட்டிருக்கியே? எதுக்கு தம்பி? மெஸேஜ் சொல்றீங்களா? இங்க வாடி என் ராசாத்தி. வாய் பேசுறதுக்கு முன்ன ஒழுங்கா படம் எடுத்திட்டு வந்து பேசணும். சரியா? போ போ போ. வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரச் சொல்லு போ.
ஏழாம் அறிவு - திரி மட்டும் சுறு சுறுவென பற்றி, வெடிக்காமல் போன வேட்டு.