ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.
ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.
ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.