Sunday, December 18, 2011

''நடிகைகள் தூங்கப்போய் விடுவார்கள், நானும், ஆர்யாவும் விளையாடுவோம்''




Sameera Reddy
வேட்டை பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நடிகர் மாதவன், பட ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவங்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.

லிங்குச்சாமி இயக்கத்தில் வேட்டை படம் உருவாகியுள்ளது. மாதவன் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக ஆர்யாவும், அமலா பாலும் வேஷம் கட்டியுள்ளனர்.இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடந்தது. பின்னர் செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது.

அதில் கலந்து கொண்ட மாதவன் பேசுகையில்,

லிங்குசாமி இயக்கத்தில், முதலில் `ரன்' படத்தில் நடித்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது, `வேட்டை' படத்தில் நடித்து இருக்கிறேன். இந்த பத்து வருடங்களில், லிங்குசாமி பெரிய டைரக்டர் ஆகிவிட்டார். நான் பத்து கிலோ எடை அதிகரித்து விட்டேன்.

தமிழிலும், இந்தியிலும் பல நிறைய டைரக்டர்களின் படங்களில் நடித்து இருக்கிறேன். கதை சொல்வதில், மிக திறமையானவர் லிங்குசாமி. ஒரு காட்சியை மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி, திருப்பத்துடன் அமைப்பதில் அவர் கெட்டிக்காரர்.

தொழிலுக்காக தன்னை அர்ப்பணிக்கும் டைரக்டர் ஒரு நடிகருக்கு கிடைப்பது, வரப்பிரசாதம். அப்படி எனக்கு கிடைத்தவர், லிங்குசாமி.

இந்த படத்தில் நானும், ஆர்யாவும் அண்ணன்-தம்பியாக நடிக்கிறோம். நிஜமாகவே இந்த படத்தின் மூலம் நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பியாக ஆகிவிட்டோம். ஆர்யா, என் கூடப்பிறக்காத தம்பி. நடிப்பில் எங்களுக்குள் போட்டி இருந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் நடித்து இருக்கிறோம்.

தினமும் படப்பிடிப்பு முடிந்தபின், நாங்கள் எல்லோரும் சேர்ந்து 2 மணி நேரம் நீச்சல் அடிப்போம். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அப்புறம் நடிகைகள் தூங்கப்போய் விடுவார்கள். நானும், ஆர்யாவும் சீட்டு விளையாடுவோம். சீட்டு விளையாட்டில், என்னிடம் இருந்து நிறைய சம்பாதித்து இருக்கிறார் ஆர்யா.

சமீராரெட்டி, எனக்கு சவுகரியமான கதாநாயகி. என் உயரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். தொழில் அர்ப்பணிப்பு மிகுந்த நடிகை. மறுநாள் பேச வேண்டிய வசனத்தை முன்தினமே எழுதி வாங்கிக்கொள்வார்.

அமலாபால் என்னை, சைட் அடிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த படத்தில் நடித்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றார் மாதவன்.