ராவண் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.
இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.
விக்ரம் முதல் முதலாக நடித்த இந்திப் படம் ராவண். மணிரத்னம் இயக்கி படுதோல்வியைச் சந்தித்த படம் இது. ஆனாலும் படத்தில் ஹீரோ அபிஷேக் பச்சனை விட, ராவணாக நடித்த விக்ரமுக்கு ஏக பாராட்டுகள் குவிந்தன.
இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'டேவிட்' என பெயர் வைத்துள்ளனர்.
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த பிஜாய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதுகுறித்து விக்ரம் கூறுகையில், "பிஜாய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பது உண்மைதான். 2012-ல் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராவண் படம் பண்ண போதே, பிஜாயுடன் எனக்கு நெருங்கிய பழக்கம்," என்றார்.
இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தை ஏற்கெனவே இயக்கியவர் இந்த பிஜாய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.