'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன
என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார்
நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து
விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம்
கொடுத்த வெற்றி தான்.
சசிகுமாரும்(குமரன்),
அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு
வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன்
தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு
பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ்
செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.
சசிகுமார்
குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில்
சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும்
ஆரம்ப சந்திப்புகளில் மோதிக்கொண்டாலும், பின்னர் ஏற்படும் சில நிகழ்வுகளால்
காதல் வயப்படுகின்றனர்.
பெட்ரோல் பங்கில் வேலை
பார்க்கும் சசி குமார், அல்லரி நரேஷ் மற்றும் தமிழ் செல்வி ஆகியோர்,
இப்படியே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, புதுமையான
முறையில் யோசித்து 'கட்டண சேவை' என்ற ஒரு புது சேவையை ஆரம்பிக்கின்றனர்.
ஒருவருக்கு
அவரது வீட்டு எலெக்ட்ரிக் பில் கட்டுவது அல்லது வீட்டிற்கு தேவையான
பொருள்களை வாங்குவது என எந்த வேலை என்றாலும் இந்த கட்டண சேவை பிரிவிற்கு
தகவல் தெரிவித்தால் போதும். சசிகுமார் குரூப் அந்த வேலையை செய்து முடித்து
விட்டு, அந்த சேவைக்கு உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்கிறது.
இந்த
புதிய சேவை மக்களிடம் பிரபலமாக இவர்களது பிஸினெஸிம் சீக்கிரமாக வளர்ந்து
வருகிறது. இத்தருணத்தில் சசிகுமாரை தேடி சிலர் வருவது மட்டுமின்றி, அவரை
ஒரு பைத்தியக்காரன் என்று அங்கிருப்போர்களிடம் சொல்லுகின்றனர். இவர்களை
கண்டதும் சசிகுமாரும் ஓடி ஒளிகிறார்.
அங்கே துவங்கும் பிளாஷ் பேக்கில் சசிகுமார் இரண்டு பேரை கொலை வெறிகொண்டு துரத்துகிறார். அங்கே வருகிறது இடைவேளை...
சசி
குமார் ஏன் அவர்களை பார்த்து ஓடினார்? பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை
வெறியோடு துரத்துகிறார்? உண்மையில் சசி குமார் யார்?
சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது? இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது? என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.
சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது? இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது? என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.
சசி குமார் ஏற்கனவே தன்
நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தில் மற்றொரு முறை அதை
நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் சென்னையில் நடக்கும் காட்சிகளிலும்
சரி இரண்டாம் பாதியில் அடர்ந்த முடியோடு காணப்படும் தோற்றத்தோடும் சரி
கனகச்சிதமாக அந்த பாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்..
சுவாதி
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க,
அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா? என
சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.
அல்லாரி
நரேஷின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி, சசிகுமார்
கூட்டணியில் எப்போதும் நட்பு உயர்த்தி வைக்கப்படும். அதே பார்முலாவை
இப்படத்தில் அல்லாரி நரேஷ் மூலம் காட்டியிருப்பது படு நேர்த்தி.
சுவாதி
தனது பகுதியை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன்களை கண்டால் ஓடி ஒளியும்
சசிகுமாரிடம் எத்தனை நாள்தான் இப்படி ஓடிக் கொண்டிருப்பது? எதிர்த்து
திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா? என்பது போல் சசிகுமாருக்கு
ஊக்கம் தரும் நாயகியாக வரும் போது நம் நினைவில் மிளிர்கிறார்.
மற்ற நடிகர்களான நிவேதா, வசுந்தரா, பரோட்டா சூரி, படவா கோபி, ஞானசம்பந்தம் படத்திற்கு படு பொருத்தம்.
ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டு அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.
படத்தின்
முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை
கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு,
ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர் சி. பாபு.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.
'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம். போராளி-போராட்டத்தில் வெற்றி