நடிகை மீனா தனது குழந்தையுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு முன்னதாக நடிகர் நாகார்ஜுனா தனது மனைவி அமலா, மகன் அகிலுடன் வந்தார்.
நாகார்ஜுனா தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஆனால் மீனா செல்வதற்குள் அங்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியும் வந்து விட்டனர். அதனால் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பிறகே மீனா உள்ளே அனுமதிக்கப்பட்டார். பின்னர் தரிசனம் செய்துவிட்டு வந்த மீனாவை முன்வாசல் வழியாகச் செல்ல பாதுகாவலர் அனுமதிக்கவில்லை.
உடனே மீனா, ராம் பகீஷா விடுதி முன்பு என் கார் உள்ளது. அதனால் என்னை முன்வாசல் வழியாகச் செல்லவிடுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் நிதியமைச்சரின் பாதுகாப்பு கருதி யாரையும் முன்வாசல் வழியாக அனுமதிக்க மாட்டோம் என்று பாதுகாவலர் தெரிவித்துவிட்டார்.
இதனால் மீனா பின்வாசல் வழியாக குழந்தையுடன் நடந்து சென்று விடுதியை அடைந்தார்.
முன்னதாக நடிகர் நாகார்ஜுனா திருப்பதி கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார். அவர் நடித்த ராஜன்னா பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக அவர் சீரடி சாய்பாபாவாக நடிக்கிறார். அந்த படம் நல்லபடியாக அமைய வேண்டி பிரார்த்தனை செய்ததாக அவர் தெரிவித்தார்.