‘டெல்லி பெல்லி’ தமிழ் பதிப்பில் நடிப்பதற்கு இதுவரை எந்த நடிகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று யு.டி.வி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி திரைப்படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'டெல்லி பெல்லி' இந்திப்படத்தினை யு.டி.வி நிறுவனம் விநியோகம் செய்தது.
இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. டெல்லி பெல்லியை தமிழில் தயாரிக்கப் போவதாகவும் யு.டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இம்ரான்கான் நடித்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கப்போகிறார் என்றும் பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன.
வதந்திகளை நம்பவேண்டாம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய தலைவர் தனஞ்செயன், " 20 பிலிம்ஃபேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறோம்.
ஆனால் இதுவரை நாங்கள் எந்த ஒரு நடிகருடன் இதுகுறித்து பேசவில்லை. டெல்லி பெல்லி தமிழ் பதிப்பில் முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பது குறித்து வலம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நாங்கள் இதுவரை அவர்களை தொடர்பு கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.