Thursday, January 5, 2012

தனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு!



Simbu
தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டுக்கு படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்த முதல் வரிக்கு அர்த்தம் கொடுத்துவிட்டார் போட்டி நடிகரான சிம்பு. குறிப்பாக கொலவெறி பாட்டு தாறுமாறாக ஹிட்டாகி உலகப் பாடலாகிவிட்டதைக் கண்டு வெந்து வெதும்பிப் போயிருக்கின்றனர். 

அதுவும் இந்திய - ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு தனுஷ் சிகரத்துக்குப் போய்விட்டதை சிம்பு போன்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

அதற்கு போட்டியாக ஒரு பாட்டை உருவாக்கினால்தான் ஆச்சு என்று கூறிக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிடும் முயற்சியில் உள்ளார் சிம்பு.

அவர் கொலவெறி என்று பாடிவிட்டார் அல்லவா... இதோ நான் காதல் பாட்டு பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு, காதல் என்ற ஒரே வார்த்தையை, பலமொழிகளில் எழுதி பாட்டு என்ற பெயரில் படுத்தியிருக்கிறார். 

இந்தப் பாட்டை பிரபலமாக்க அவரும் படாத பாடுபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கை திறந்தால், ஒரே நாளில் நான்கைந்து முறை இந்தப் பாடலின் லிங்கைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

யுட்யூபிலோ சோனிமியூசிக் மூலம் காசு கொடுத்து புரமோட் செய்து வருகிறார்கள் (Promoted video). 

இதுகுறித்து திரையுலகில் இளம் நடிகர்கள் இருவரிடம் கருத்துகேட்டோம். பெயரைச் சொல்ல விரும்பாத அவர்கள் கூறுகையில், "சினிமாவில் போட்டி சகஜம். அதைவிட சகஜம் பொறாமை. அதன் விளைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வெறும் போட்டியாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும். முன்பெல்லாம் ரஜினி - கமல், பாக்யராஜ் - ராஜேந்தர் மாதிரி. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பொறாமை முயற்சிகள் சகிக்கவில்லை. தனுஷ் தன் படத்துக்காக ஒரு பாட்டை எழுதிப் பாடினார். காட்சியின் சூழலுக்கு தேவைப்பட்ட பாட்டு அது. அந்தப் பாட்டு ஹிட்டானதும் அதை சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் இறங்கியதால், உலகப் புகழ் பெற்றது. இதை தாங்க முடியாமல், இந்த காதல் பாட்டு உருவாகியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தப் பாடலுக்கு அவசியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி!," என்றனர்.

முடிஞ்சா இதை நேரிலும் சொல்லுங்கப்பா!