யுடிவி நடத்தும் சூப்பர் ஸ்டார் சான்டா தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அவர். நட்பை பற்றிய நிகழ்ச்சி இது.
அசினின் இந்த முடிவு பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. தமிழில் அசின் இருந்தவரை நம்பர் ஒன்னாகத் திகழ்ந்தார். பின்னர் அவராக வந்து நடித்த படம் காவலன். அந்தப் படமும் நன்றாகவே போனது.
இந்த நிலையில், பாலிவுட்டில் அவர் நடித்த கஜினி அளவுக்கு வேறு படம் அமையவில்லை. அடுத்த படம் லண்டன் ட்ரீம்ஸ் தோற்றாலும், அதற்கடுத்து வந்த ரெடி ஹிட்டானது.
ஆனாலும் கத்ரீனா கைஃப், கரீனா கபூர், ப்ரியங்கா சோப்ரா, இப்போது வித்யா பாலன் என நடிகைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், அசினுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் இல்லை. இப்போது இந்தியில் ஹவுஸ்புல் 2, போல் பச்சன் என இரு படங்கள் மட்டும்தான் அவர் வசம் உள்ளன. இந்த இரண்டிலும்கூட அவர் பிரதான நாயகி இல்லை. கூட்டத்தோடு வந்து போகிற வேடங்கள்.
பெரிய வாய்ப்புகள் இனி வராது என்று புரிந்து கொண்டதால், வேறு வழியின்றி சின்னத் திரைக்கு வந்துவிட்டார் அசின்.
'சின்னத் திரை உலகின் சுவாரஸ்யங்களை அனுபவிக்க வந்திருக்கிறேன்,' என இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அசின்.
ஆனால் எப்படிப் பார்த்தாலும் அசினுக்கு இது பெரிய இறங்குமுகம். இதுவரை அவருக்கான வாய்ப்புகளை தங்க தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு மும்பைக்குப் போகும் தமிழ் இயக்குநர்களும் இனி கண்டு கொள்ளமாட்டார்கள். சின்னத் திரையில் நடித்துவிட்டு, அப்படியே மலையாளக் கரையோரம் ஒதுங்க வேண்டியதுதான், என்று கமெண்ட் அடித்துள்ளன மும்பை பத்திரிகைகள்!