Tuesday, October 30, 2012

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கொட்டும் மழையில் வந்து அஞ்சலி செலுத்தி ஜெ.


பசும்பொன் கிராமத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்றுகாலை 105வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடந்தது. இதில் அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, முனுசாமி, செந்தில் பாலாஜி, காமராஜ், சுந்தரராஜன், கோகுல இந்திரா, செந்தூர் பாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல பல்வேறு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் ஜெ. அஞ்சலி
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலை இன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் உடன் வந்து கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு
திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன், ஜெ. அன்பழகன், டி.ஆர்.பாலு மகன் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் பல்வேறு கட்சியினர், அமைப்பினரும், தேவர் சமூகத்தினரும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மட்டமான படங்கள் சகிக்காமல் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநரானேன்!’- மணிரத்னத்தின் ஊமைக் குசும்பு



Conversations With Maniratnam Irks Film Makers

எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:
‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.
பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.
எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.
அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?
'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!
நியாயம்தானே!

Monday, October 29, 2012

நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?

Sivakumar Family Denies Reports On His Health
நடிகர் சிவகுமாருக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்த செய்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகுமார் திடீரென்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவியது.
விசாரித்தபோது, 'இது வெறும் வதந்திதான்'' என்று சிவகுமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
"சிவகுமாரும், குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை சென்றார்கள். அப்போது, சிறுநீரக கல் பரிசோதனை செய்து கொள்வதற்காக, சிவகுமார் அங்குள்ள வேதநாயகம் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மகன் நடிகர் சூர்யாவும் சென்றிருந்தார்.
சிவகுமாருக்கு டாக்டர் கந்தசாமி மருத்துவ பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிந்து சிவகுமார் வீடு திரும்பி விட்டார். அவர் நலமாக உள்ளார்,'' என்று சிவகுமார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
சிவகுமாரின் பிஆர்ஓவும் பின்னர் இதுகுறித்து தனியாக அறிக்கை அனுப்பியிருந்தார்.

Sunday, October 28, 2012

தில்லு முல்லு


பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான தில்லு முல்லு படம் ரீமேக் ஆகிறது.  வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ரஜினி வேடத்தில் சிவா நடிக்கிறார். நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கோவை சரளா, டாக்டர் சீனிவாசன், சத்யன், இளவரசு, மனோபாலா, பிரமானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி பத்ரி இயக்குகிறார். இவர் வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு படங்களை டைரக்டு செய்தவர்.
இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இணைந்திருப்பது பட உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஹிட் பாடல்களுடன் வந்த ஏ.வி.எம்.மின் மெல்ல திறந்தது கதவு படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
லஷ்மண் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாடல்கள் கண்ணதாசன், வாலி, எடிட்டிங்: பிரவீன்ஸ்ரீகாந்த், ஸ்டண்ட்: ராக்கி ராஜேஷ், நடனம்: கல்யாண், தினேஷ், ஷோபி, அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

செ‌ன்‌சா‌ர்‌ குழுவை‌ கண்‌கலங்‌கவை‌த்‌த நீ‌ர்‌பறவை‌ ‌


படங்களை பார்த்து சென்சார் போர்டு கண்ணீர் விடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். காரணம், இந்த மாதிரியான படங்களை கூட நாங்க பார்த்து சர்டிபிகேட் தர வேண்டியிருக்கே என்கிற வேதனையில் வருகிற கண்ணீர்தான் அது. ஆனால் அதே சென்சார் போர்டு குழுவினர் நிஜமாகவே படத்தைப் பார்த்து ஃபீல் பண்ணி கண்கலங்கினார்கள் என்றால் அது ஆச்சரியம்தானே. மூன்று தேசிய விருதுகளைதென்மேற்கு பருவகாற்று’ படத்தை இயக்கிய இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் உதயநிதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் நீர்ப்பறவை. இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் பெறுவதற்காக சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு நீர் பறவை போட்டுக் காட்டப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் க்ளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து நிஜமாகவே கண் கலங்கிவிட்டார்களாம். ஒரு வார்த்தை கூட பேச முடியாதவர்களாக யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.

வி‌மர்‌சனம்‌ – சுந்‌தரபா‌ண்‌டி‌யன்‌


‘சுப்பிரமனியபுரம்’ படத்தின் மூலம் நல்ல இயக்குநராகவும், ‘பசங்க’ படத்தின் மூலம் நல்ல தயாரிப்பாளராகவும், ‘நாடோடிகள்’, ‘போராளி’ ஆகியப் படங்களின் மூலம் நல்ல நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்திகொண்ட இயக்குநர் சசிகுமார், ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் தன்னை பெண்களுக்கும் பிடிக்கும் காதல் ஹீரோவாக அடையாளப் படுத்திகொண்டிருக்கிறார்.
எப்போதும் கோவமும், கொதிப்புமாக வலம் வந்த சசிகுமார், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் காதலும், கலகலப்புமாக வலம் வருகிறார்.
நண்பனின் காதலுக்கு உதவப் போகும் சசிகுமார், தான் காதலித்த பெண்ணை தான் தனது நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்து கொண்ட பிறகும், தனது நண்பனின் காதலுக்காக உதவுகிறார். இதற்கிடையில் அதே பெண்ணை வேறு ஒருவன் காதலிக்க இருவருக்கும் இடையே பஞ்சாயத்து தலைவராகும் சசிகுமார் காமெடியான தீர்ப்பை சொல்ல, அதை விட காமெடி அந்தப் பெண் சசிகுமாரை காதலிப்பதாக சொல்கிறாள்.
இறுதியில் சசிகுமாருக்காக அவருடைய நண்பன் வழிவிட, சசிகுமார்-லஷ்மி மேனனின் காதல் வளர்கிறது. இதற்கிடையில் லஷ்மி மேனனை ஒன் சைடாக காதலிக்கும் அப்புக்குட்டி, தொடர்ந்து லஷ்மி மேனனுக்கு தொல்லைகொடுக்க, அதை கேட்கப் போகும் சசிகுமாரின் கோஷ்ட்டிக்கும், அப்புக்குட்டியின் கோஷ்ட்டிக்கும் ஓடும் பஸ்ஸில் கை கலப்பு ஏற்படுகிறது. இந்த சண்டையில் அப்புக்குட்டி பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போகிறார். இதனால் சசிகுமார் ஜெயிலுக்குப் போகிறார்.
இதற்கிடையில் அப்புக்குட்டியின் மரணத்திற்குப் பழிவாங்க சசிகுமாருக்கு அவருடைய நண்பர் ஒருவரே எதிரியாகிறார். அதே நேரத்தில் லஷ்மி மேனனின் முறை பையனான விஜய் சேதுபதியும் தனது முறைப் பெண்ணை காதலித்ததற்காக சசிகுமாரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இவரும் சசிகுமாரின் ஒரு நண்பர் தான். இப்படி காதலுக்காக நண்பர்களையே எதிரிகளாக்கிக்கொண்ட சசிகுமாரை இவர்கள் என்ன செய்தார்கள்? ஜெயிலில் இருந்து சசிகுமார் வந்தாரா? லஷ்மி மேனனை கரம் பிடித்தாரா இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
சசிகுமாரின் முந்தையப் படங்களில் உள்ள நட்பு செண்டிமென்ட் இந்தப் படத்திலும் இருந்தாலும், இதில் அவர் ஹீரோயினை விரட்டி விரட்டி காதலிப்பது, நண்பனின் காதலுக்கு துணைபோவது போன்ற எப்பிசோட்கள் புதுசுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிராமத்து கதையை நகைச்சுவையும், விறுவிறுப்பும் கலந்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில், பஸ்ஸில் பயணிக்கும் ஹீரோயினை காதலுக்காக ஹீரோ விரட்டுவதையே  சொல்லியிருந்தாலும், அதை எந்தவித அலுப்பும் ஏற்படாத வகையில் திரைக்கதையை ரொம்பவே கஞ்சிதாமாக அமைத்து படத்தை ஜெட் வேகத்தில் இயக்குநர் நகர்த்தியிருக்கிறார்.
முதல் பாதியை காமெடியின் மூலம் நகர்த்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் நகர்த்தி இறுதியில் படத்தை ரசிக்கும்படி முடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்று விடுகிறார்.
சசிகுமார், இந்த படத்திலும் தன்னை நல்ல நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். அழுக்குச் சட்டை ஹீரோவாக வலம் வந்த சசிகுமாருக்கு இந்த படத்தில் பலவிதமான காஷ்ட்யூம்களை இயக்குநர் கொடுத்திருக்கிறார். முறைப் பெண்களை கேலி செய்வது, வயதானாவர்களுடன் விளையாடுவது. ஹீரோயினை காதலிப்பது என அனைத்து இடங்களிலும் சகஜமானக நடிப்பை சசிகுமார் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினி ரசிகராக இந்த படத்தில் நடித்திருக்கும் சசிகுமார், டி.ராஜேந்தர் ரசிகரைப் போல தாடியுடன் ஏன் வலம் வருகிறார் என்பது தான் புரியவில்லை!
மலையாளப் புது வரவு லஷ்மி மேனனுக்கு நல்ல ஹோம்லியான முகம். அந்த முகத்திற்கு ஏற்றவாறு பலவிதாமன எக்ஸ்பிரன்ஸ்களை கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார். மாடர்ன் டிரஸ், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தால் வேலைக்காக மாட்டார். இப்படியே ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே காலத்தை ஓட்டுங்க அம்மணி.
படத்தில் நடித்த விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், செளந்தர ராஜா என அத்தனை பேரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் கதாபாத்திரங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அத்தனை பேருடைய நடிப்பும் ரசிகர்கள் மனதில் பதியும் விதத்தில் இருக்கிறது.
அதிலும் அப்புக்குட்டி இந்த படத்தில் ஒரு புது பரிணாமத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அளவான நடிப்பும் அமர்க்களப்படுகிறது.
சூரி, இந்த படத்திலும் பரோட்டாவை விடவில்லை என்றாலும், படத்தின் முதல் பாதியை தனது டைமிங் காமெடி மூலம் ரொம்ப ஜாலியாக நகர்த்தி சென்றிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு சூரிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் காதலைப் பற்றி சொல்லும் மான்டேஜ் பாடலான “காதல் வந்து பொய்யாக…” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. மற்றப் பாடல்களும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
ச.பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் அழகான தேனி இன்னும் கூடுதலான அழகோடு ஜொலிக்கிறது. தேர்வு செய்திருக்கும் லொக்கேஷன்களும், அதை படம்பிடித்திருக்கும் விதமும் அருமை.
சசிகுமாரின் உதவியாளரான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் முதல் படம் இது. முதல் படத்திலேயே ரசிகர்களின் பல்சை நன்றாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஒரே சூழலில் நகரும் திரைக்கதையாக இருந்தாலும், அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார்.
திரைக்கதையை கூர்மையாக அமைத்திருக்கும் இயக்குநர் பிரபாகர், வசனத்தையும் கூர்மையாக எழுதியிருக்கிறார். “எதிரியை ஜெயிக்க நினைக்கனும் அழிக்க நினைக்க கூடாது”, “குத்தினவன் நண்பனாக இருந்தால் அதை கடைசி வரை யாரிடமும் சொல்ல கூடாது.” போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்கும் வசனங்கள்.
நட்பு, காதல் என்பது தமிழ் சினிமாவின் பழைய ரசம் என்றாலும், அதை கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் சுவை கூடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இயக்குநர் ‘சுந்தர பாண்டியன்’ படத்தை மக்களுக்கு பிடிக்கும் சூப்பர் பாண்டியனாக்கியிருக்கிறார்.

வி‌மர்‌சனம்‌ – சா‌ட்‌டை‌


நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா
ஒளிப்பதிவு: ஜீவன்
இசை: டி இமான்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்)
எழுத்து – இயக்கம்: எம் அன்பழகன்
சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.
ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது…
எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்… குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!
நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.
ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்… ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.
அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே… க்ளாஸ்!
உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!
தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா… என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.
இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் – மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!
சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..
ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?
இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.
புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. அடிச்சுருவேன் பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்



 Vijayakanth Slam Media
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் மூத்த பத்திரிகையாளர் பாலு கேள்வி எழுப்ப சட்டென கோபமடைந்து ‘போய்யா..போய்.ய்யா' என்று கடுப்பாக மிரட்டினார்.
ஜெயலலிதாவிடம் கேளுங்க...
பின்னர் மைக்குகளை நீட்டிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், நாட்டுல எவ்ளோ பிரச்சனை.. மின்வெட்டை பத்தி பேசலாம்.. டெங்குவை பத்தி பேசலாம்.அதைவிட்டுவிட்டு.." என்று கூறிக் கொண்டிருந்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள். இதில் ஆவேசமடைந்த விஜயகாந்த், போய் ஜெயலலிதாவை கேளுய்யா.. போய் அங்கெல்லாம் கேளுய்யா" என்று ஆக்ரோஷமாக கூறியதுடன் "அடிச்சிருவேன்" என்றும் கையை ஓங்கியபடி நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.
நாய்...நாய்..
அப்போது முதலில் விஜயகாந்த் கோபமாக பேசிய பத்திரிகையாளர் பாலு மீண்டும் கேள்வி எழுப்ப., நாய்.. நாய்களா... வந்துட்டாங்க..உங்க கம்பெனியா சம்பளம் கொடுக்குது.. பேட்டி கொடுக்க... என்று ஆவேசமாகக் கூறியபடியே சென்றார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் அந்த பத்திரிகையாளரைத் தடுக்க அவர் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்
பத்திரிகையாளர் பாலு சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தம்மை தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் மீது நடவடிக்காகை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

Friday, October 26, 2012

வழுக்கி விழுந்து அலறித் துடித்த ஹன்சிகா!



Hansika Modhwani Injured
ஷூட்டிங்குக்காக மும்பை சென்ற நடிகை ஹன்சிகா மோத்வானி அங்கு ஹோட்டல் அறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். உடனடியாக விரைந்து வந்த ஹோட்டல் ஊழியர்கள் முதலுதவி செய்து சுளுக்கை எடுத்து விட்டனர். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பை போனார் ஹன்சிகா. அங்கு ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பு குளிப்பதற்காக பாத்ரூமுக்குப் போனார். அப்போது தரையில் வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதனால் உடலில் சுளுக்கு மற்றும் வலி ஏற்பட்டு அலறித் துடித்தார்.
ஹோட்டல் ரூம் சர்வீஸை அவசரமாக போனில் அழைத்தார். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களே சுளுக்கை எடுத்து விட்டு ஹன்சிகாவுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் 'விசில்' ...ரஜினி கொடுத்த ஐடியா!



Rajini S Idea Yg Mahendra

விசில் மூலம் பாட்டுப்பாடுவது ஒரு கலை. அது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கைவந்த கலை. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் விசில் அடித்து பாரட்டுப் பெற்றார்.
மகேந்திரனுக்கு வெகு காலமாகவே தனது விசில் திறமையை ஊர் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த நிலையில், விசில் பாட்டுக்களை சிடியாக போடலாமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐடியா கொடுக்கவே அதை உடனே செயல்படுத்திவிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.
எம்.எஸ்.வி இசையில் வெளியான சுமார் ஏழு பாடல்களை தனது விசில் சப்தத்தால் பாடி, அதை சரிகம நிறுவனம் மூலம் சி,டியாகவும் வெளியிட்டு விட்டார்.
நினைத்த மாதிரியே ஊர் உலகம் பாராட்டும் இந்த இசை தகட்டின் முதல் ரசிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். விசில் அடித்தால் கிராமங்களில் அடிக்க வருவார்கள், ஆனால் சிட்டி ஒய்.ஜி. மகேந்திரனுக்கோ பாராட்டு குவிகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பீலிங்...!

தப்புத் தப்பா பேசறாங்களே... - காஜலின் வருத்தம்



Kajal S Explanation
என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசறாங்க... தப்பா செய்தி பரப்பறாங்க... அதான் எனக்கு கவலையா இருக்கு! - இப்படிச் சொல்லி வருத்தப்படுபவர் முன்னணி நாயகி காஜல் அகர்வால்.
காஜல் அறிமுகமான போது, தமிழில் அவரைச் சீந்த ஆளில்லாத நிலை.
ஆனால் தெலுங்கில் அவர் பெற்ற வெற்றி, பெரும் சம்பளத்தில் தமிழ் வாய்ப்புகளைத் தேடித் தந்தது.
ஆனால் அவரது இரண்டாவது ரவுண்டில் நான் மகான் அல்ல வெற்றி பெற்றாலும், சமீபத்தில் வெளியான மாற்றான் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது.
விஜய்யுடன் நடித்த 'துப்பாக்கி' தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். கார்த்தியுடன் 'ஆல் இன் அழகு ராஜா' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.
ஆனால் இனி புதிய படங்கள் எதுவும் அவருக்கு வருமா என்று கேட்கும் அளவுக்கு இன்டஸ்ட்ரியில் அவரைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருகிறது.
இதனால் கவலையடைந்துள்ள காஜல், "என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. சில படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டதாகவும், பத்திரிகையாளர்களை நான் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இவற்றில் உண்மை இல்லை.
தயவு செய்து என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்ப வேண்டாம். இது என் கேரியரையே பாதிக்கும் அளவுக்கு மாறியுள்ளது," என்றார்.
 

நடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா!!

'நண்பா... அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்... டாப் 5 ஹீரோயின்கள் பெயர் சொல்லேன்.... '
"அது வந்து... ம்ம்... டாப்பா... அப்படி யாரும் இல்லியே... அமலாபால், ஹன்ஸிகா, காஜல்... இவ்ளோதான் தேறுவாங்க போலிருக்கு. இதுல அஞ்சு பேரை எங்கே தேடறது...?"
heroine shortage kollywood

"ஏன்.. மத்தவங்கள்லாம் ஹீரோயினா தெரியலையா..."
"அவங்க நடிகைகள் என்ற அளவில்தான் இருக்காங்க... இரண்டு பேர்ல ஒருத்தரா நடிக்கிற நடிகைகள் அவ்வளவுதான்..."
"சரி, முன்னணி ஹீரோக்களோட நடிக்கிற மாதிரி யாரும் தேறுவாங்களா..."
"ம்ஹூம்.. மிஞ்சிப் போனா... அனுஷ்கா ஒருத்தர்தான். த்ரிஷா, நயன்தாரால்லாம் ரிடையர்மெண்ட் ஸ்டேஜ். ஏதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி..."
"சரி.. புதுசா ரெண்டு மூணு பேர் வந்தாங்களே... சுந்தர பாண்டியன் லட்சுமி மாதிரி.. அவங்கள்லாம் எப்படி?"
"அட சும்மாருங்க... அந்த லட்சுமி முதல் படத்துல 3 லட்சம் வாங்குச்சு. இப்போ அப்படியே ஜம்ப் பண்ணி 40 லட்சம் வரைக்கும் கேக்குது!"

தமன்னா, இலியானா?
'அட போங்கண்ணா... மெட்ராசிலிருந்து போன் கால் வருதுன்னா அவங்க டேமேஜருங்க.. ஸாரி மேனேஜருங்க கூட போனை அட்டன்ட் பண்றதில்லை!!'

இந்த நீத்து சந்திரா, சமீரா ரெட்டி?
என்ன விளையாடறீங்களா.. அவங்கள இப்போ யாரு ஞாபகத்துல வச்சிருக்காங்க!!
"என்னப்பா இப்படி சொல்லிட்டே... இந்த ரிச்சான்னு ஒரு பொண்ணு நல்லா ப்ரஷ்ஷா வந்துச்சே... இனியான்னு நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு... அப்புறம் ராதா மகள்கள்... இவங்களையெல்லாம் விட்டுட்டியே!"
நண்பா.. நிலைமையே தெரியாம கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டிருக்க நீயெல்லாம்... அவங்கள்லாம் சம்பளத்தொகை சொல்லும்போது தெறிச்சு ஓடணும் போலிருக்கும்... அதுவும் ராதாவோட பொண்ணுங்க இருக்காங்களே... அவங்க ரெண்டு பேத்தையும் வச்சு கோடம்பாக்கத்தையே மொத்தமா சுருட்ட முடியுமா பாக்கறாங்கப்பா... அந்தக் காலத்துல அம்பிகா - ராதா மாதிரி, இப்போ கார்த்திகா - துளசிய கொண்டு வரணும்ங்கிறதுதான் திட்டமாம்!

சரி... இப்போ முன்னணில இருக்கிற நடிகைகள் சம்பளம் எவ்வளவு?
முன்னே மாதிரி ஒளிச்சி மறைச்சி பேசி பயனில்ல நண்பா... அவங்கே டிமான்ட் பண்ணி இம்சிக்கும் போது, நாம மட்டும் ஏன் அதை சொல்லாம இருக்கணும்... இதோ லிஸ்டு.. அனுஷ்கா, நயன்தாரா - ரூ 1.50 கோடி. த்ரிஷா, ஹன்சிகா ரூ 75 லட்சம். ஸ்ருதிஹாஸன் (நான் பாலிவுட்டுலருந்து வர்றேனாக்கும் என்ற பந்தாவுடன்) ரூ 70 லட்சும், அமலா பால் 70 லட்சம், அஞ்சலி 70 லட்சம்!!
கண்ணக் கட்டுது நண்பா.. நல்ல அம்சமா ஒரு பத்து ஹீரோயின்களை இறக்குமதி பண்ண வேண்டியதுதான். என் அடுத்த படத்துல நிச்சயம் ஒரு புது ஹீரோயின்தான்!!
-இது ஏதோ கற்பனையான உரையாடல் அல்ல... கடந்த மூன்று தினங்களில் வெவ்வேறு இயக்குநர்கள் - ஹீரோக்களுக்கிடையே க்கிடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு... நிஜமான டயலாகுங்க!!