நடிகை
சோனா மகாபலிபுரம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில்
இழுத்துச் செல்லப்பட, கூடவே குளித்த பிரேம்ஜியும் குழுவினரும் ஓடிப்போய்
காப்பாற்றினாராம்.
ஒன்பதுல குரு என்ற படத்துக்காகத்தான் இப்படி இருவரும் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்களாம், இயக்குநர் பிடி செல்வகுமார் மேற்பார்வையில்.
அப்போது இருவரும் அலையில் சிக்கினார்களாம். சோனாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடி அலற, படக்குழுவும் பிரேம்ஜியும் கடலுக்குள் பாய்ந்து சோனா தலைமுடியை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தார்களாம்.
உயிர் பிழைத்தது குறித்து சோனா கூறுகையில் (சத்தியமா இது பப்ளிசிட்டி இல்லையாங்க!!)," ஒன்பதுல குரு படத்தில் நான் குளிப்பது போன்றும், என்னோடு நடிப்பவர்கள் கடலில் விழுந்து விடுவது போன்றும் காட்சிகளை எடுத்தனர். இயக்குனரிடம் என்னை இன்சூரன்ஸ் செய்து உள்ளீர்களா என்று அப்போது வேடிக்கையாக கேட்டபடி நடித்துக் கொண்டு இருந்தேன்.
திடீரென என்னுடன் நடித்தவர்கள் கடலில் விழுவதற்கு பதிலாக தவறிப் போய் நான் விழுந்துவிட்டேன். பயந்துபோய் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடினேன்.
படப்பிடிப்பு குழுவினர் வந்து மீட்டனர். இது எனக்கு பயங்கரமான அனுபவமாக இருந்தது," என்றார்.