தெலுங்கில் சமீபத்தில் வெளியான இரு தமிழ் டப்பிங் படங்கள், அந்த மொழி மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் போய்விட்டன.
தமிழில் சமீபத்தில் வெளியாகி, எழுத்தாளர்கள் மற்றும் சில ப்ளாக்கர்களால் மட்டும் கொண்டாடப்பட்டு வரும் அரவான் படத்தை, ஏக வீரா என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்தனர்.
முழுக்க முழுக்க களவுத் தொழிலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குற்றப்பரம்பரைக் கதையை தெலுங்கு மக்கள் சுத்தமாக ரசிக்கவில்லை. மீடியாவும் கடுமையாக விமர்சித்துள்ளன.
இன்னொரு டப்பிங் படம் மல்லிகாடு. மூன்றாண்டுகளுக்கு முன் தமிழில் வந்த மதுரைக் கதையான பருத்திவீரன்தான் இந்தப் படம். தெலுங்கு மக்கள் இந்த தலைப்பே தவறு என்கிறார்கள். ஒரு தமிழ் நேட்டிவிட்டி உள்ள படத்தை தெலுங்கு வசனம் எழுதி வெளியிட்டால் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பியுள்ளன தெலுங்கு பத்திரிகைகள்!