Saturday, March 3, 2012

அரவான் - திரைவிமர்சனம் / Arvaan Exclusive Cover Story

Aravaan-Movie-Reviewஇயக்கம்: ஜி வசந்தபாலன் 
நடிகர்கள்: ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி,சிங்கம் புலி, பரத், அஞ்சலி 
இசை: கார்த்திக் 
கேமரா: சித்தார்த் 
எடிட்டிங்: பிரவீண் கே எல் மற்றும் என் பி ஸ்ரீகாந்த் 
தயாரிப்பு : டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவா 
ரிலீஸ் தேதி: மார்ச் 02, 2012
சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள “அரவான்” நேற்று முதல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் கதை :
பசுபதி(கோம்பொதி) தமிழ்நாடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வேம்பூர் கிராமத்திற்கு சமூக தலைவராக உள்ளார். பசுபதியின் தொழிலே வெளியூர் சென்று, திருடி வருவதுதான். திருடி வந்த மதிப்பு மிக்க நகைகளை மிகக் குறைந்த மதிப்புக்கு கொடுத்து, அவர்களிடமிருந்து பண்டமாற்றா நெல் வாங்கி, தான் வாழும் கிராமத்து மக்களுக்கு படி அளக்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரிலுள்ள மகாராணியின் வைர நெக்ளஸ் காணாமல் போய்விடுகிறது. இதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம், அதாவது 6 மாதத்திற்கு தேவையான அளவு நெல் வழங்கப்படும் என்று அறிக்கை விடப்படுகிறது.
Aravaan-Review
பசுபதி ஓர் இரவு நேரத்தில் நெக்ளஸை தேடிக்கொண்டு போகும்போது தான், ஹீரோ அனாதையான ஆதியின்(வரிபுலி) அறிமுகம் கிடைக்கிறது. ஆதியும் ஒரு களவாணி தான். இந்த வைர நெக்ளஸ் தன்னிடம் தான் இருக்கிறது என்கிறார் ஆதி. பின்பு இவர்களிருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததாக வைர நெக்ளஸை மகாராணியிடம் ஒப்படைக்கின்றனர். இதனால் அறிவிப்பின் படி அவர்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நெல் கிடைக்கிறது.
பின்னர் மெதுவாக பசுபதி, ஆதிக்கு குடும்பம் இருக்கிறது என்றும் இவர் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கிறார்.
இதன் பிறகு ஆதிக்கு தன்ஷிகா(வனப்பேச்சி) மீதுள்ள காதல், உணர்வு, வீரம், துரோகம், சோகம் என்று பிளாஸ்பேக்குடன் கதை நகர்கிறது. மேலும், தன்ஷிகா, பாளையக்காரர், கிங் என்று இவர்களின் பல நினைவுகளோடு, நம்மளையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது கதை!
இறுதியில் பசுபதி தன்ஷிகாவுடன் சேர்ந்தாரா...? பசுபதிக்கும் ஆதிக்கும் இடையேயான உறவு என்னாச்சு..? இந்த புதிர்களுக்கான விடை தான் படத்தின் கிளைமாக்ஸ்...!!!
நிறை - குறைகள் :
இயக்குனர் மணிரத்னத்திடம் தற்போதுள்ள இளம் இயக்குனர்கள் மத்தியில் மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான திரைப்பட தயாரிப்பாளர் யார் என்று கேட்டபோது, அவர் உடனே "வசந்தபாலன்" என்று பதிலளித்தார். இதே பதிலை இயக்குனர் ஷங்கரும் கூறினார்.
அந்த அளவிற்கு திறமையும், அர்ப்பணிப்பும் கொண்டு “அரவான்” படத்தை தந்ததற்கு இயக்குனர் ஜி. வசந்தபாலனுக்கு முதலில் பாராட்டுக்கள்! தயாரிப்பாளர் டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவாவிற்கு நன்றிகள்.
Aravaan-Tamil-Movie-Review
ஹீரோ ஆதி தன் சிக்ஸ் பேக் பாடியுடன் தனது சிறப்பான நடிப்பை நிரூபித்திருக்கிறார். இவருடன் பசுபதியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ஹீரோயின் தன்ஷிகா அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி காமெடி படத்திற்கு பலம்.
அடுத்ததாக ஆர்ட் டைரக்‌ஷன், அந்த காலத்து 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களின் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாவற்றையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் புது முகம் என்று தெரியாத அளவிற்கு பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சித்தார்த்தின் கேமாரா படத்திற்கு ப்ளஸ்.
மர்மமான மகாபாரத பாத்திரம் போல, இந்த ”அரவான்” கூட நம் மனதில் நிற்கும். ”அரவான்” பார்க்க வேண்டிய நல்ல பொழுது போக்கு படம்...! பார்க்க தவறாதீர்கள்...!