Say Good Bye to Toll Fees - First phase 125 TOLL FREE Highways - Check whether your's is on the list - Brief Analysis - எல்லோருக்கு உள்ள ஒரே கடுப்பு விரைவு சாலையில் டோல் கட்டணம் மற்றும் அதற்க்கான காத்திருப்பும், ஏற்கனவே தனியார் வாகனங்களின் டோல் கட்டணத்தை நீக்கும் பரிந்துரையை ஏற்று இன்னும் சில நாட்களில் (இந்த மாதத்துக்குள்) முதல் 125 டோல்கேட்கள் இலவசமாகின்றன. இது எதனால் என்பதை விரிவான அனலஸிஸ் கூறுகிறது. பி ஒ டி - என்னும் "பில்டு -ஆப்பரேட் - டோல்" முறையில் விடபட்ட பல டோல்களை ஆடிட் செய்த வகையில் 74 டோல்களில் 61 ஏற்கனவே அவர்கள் இன்வெஸ்ட் செய்த தொகை வட்டியும் முதலும் லாபமும் முடிந்த பின்பும் இன்னும் கொள்ளை அடித்திருகின்றன என ஆரம்பகட்ட தகவல் உறுதி செய்கின்றன. அது மட்டுமல்ல 11,400 கோடி மொத்த டோல் வருமானத்தில் தனியார் வாகன வருமானம் வெறும் 1600 கோடி தான் - ஆனால் அதற்க்காக டிராஃபிக் ஜாமில் மாட்டி நின்று டோல் கட்டிய நேரத்தில் செலவான பெட்ரோலின் மதிப்பு மட்டும் 88,000 கோடிகள்..............அதுமட்டுமல்ல இது நாட்டின் 2-3% ஜிடிபி ஆகும். கூட்டி கழிச்சு பார்த்தா நீங்க சொன்ன மாதிரி டோலும் கட்டி பெட்ரோலும் வேஸ்ட் பண்ணி அதனால நஷ்டம் நமக்கும் அரசுக்கும் தான் - வழக்கம் போல ரோடு போட்டவங்களுக்கு கொள்ளை லாபம். அதனால வரும் காலங்களில் அனைத்து டோலும் தனியாருக்கு இலவசமாக்கி வெறும் வணிக துறை வண்டிகளுக்கு மட்டும் சுங்கம் வர இருக்கிறது. அதிலும் ஈ டோல் எனப்படும் எலக்ட்ரானிக் பேமென்ட் வைத்தால் நின்று அந்த ஸ்பீட் பிரேக்கர் மேல ஏத்தி இறக்கி செல்லாமல் ஆள் இல்லா டோல் இன்ஸ்டால் செய்யப்படும். தனியார் வாகனங்களுக்கு விற்பனை போதே 2% அதிக தொகை வைத்து வாங்கி கொண்டு இந்தியா முழுவதும் எந்த ஒரு டோலிலும் காசு வேட்டை இருக்காது. சமீபத்தில் மதுரையில்2007 முடிந்தபோதும் 8 வருஷமாய் டோல் வாங்கினதை சமீபத்தில் தான் கண்டுபிடித்து மதுரை புறவழிச்சாலை 70 ரூபாய் கொள்ளையை நிறுத்தி இருந்தாலும் இது வரை ஆயிரக்கணக்கான கோடிகளை கலெக்ட் செய்திருக்கின்றனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த 125 இலவச டோல் பிளாசாவில் உங்கள் டோல் கேட் இருக்கிறதா என்பதை இன்னும் சில நாட்களில் விவரமாய் வெளியிடுகிறேன் - நன்றி.