முதல் காட்சியே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் அட்டகாசமாக தோன்றியிருக்கிறார்.
கதை என்ன?
திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி. இதை வைத்து ரஜினியை மிரட்டி தன் ஊருக்கு வரவைக்கிறார் அனுஷ்கா
இடைவேளையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தாத்தா ரஜினி, சோனாக்ஷி சின்ஹா வின் கதைக்களம் விரிகிறது.
முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. கொஞ்சம் கதையுடன் முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.
பிற்பாதி கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன் இருக்கிறது. டிரைலரில் பார்த்த அந்த அணையை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை கனமான கதையம்சத்துடன் கூறியுள்ளார் இயக்குனர்.
சூப்பர்ஸ்டார் வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்துகொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். ரயில் சண்டைக்காட்சியில் பின்னி எடுத்துள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா கொஞ்சம் பளிச்சிடுகிறார். பாலிவுட் இறக்குமதியான சோனாக்ஷிக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லையென்றாலும் பாடல்களில் மனதில் பதிகிறார். காமெடிக்கு சந்தானத்துடன் கருணாவும் இணைந்துள்ளார்.
பாடலில் சொதப்பினாலும் பின்னணி இசையில் ரகுமான் மிரட்டியுள்ளார்.
திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமாரின் அனுபவமும் நேர்த்தியும் அருமை. எப்போதும் போல இந்த படத்திலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியுள்ளார். ஒளிப்பதிவில் ரத்னவேலு அந்தகாலம், இந்தகாலம் என்று மெனக்கெட்டு நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்.
மொத்தத்தில் “லிங்கா” மூலம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார் “கிங்கா”.