Thursday, December 20, 2012

கும்கி - விமர்சனம்


 Kumki Review

ஒரு மெகா கொம்பன் யானை, அதை சமாளிக்க ஒரு டூப்ளிகேட் கும்கி யானை, இரு ஒரிஜினல் காதலர்கள்.... நெஞ்சை அள்ளும் அருவியும் அழகிய மலைச் சாரலும் பின்னணியாக... படிக்கும்போதே இதமாக இருக்கிறதல்லவா... பார்க்கும்போதும் சில காட்சிகள் அப்படித்தான் உள்ளன. ஆனால்...? மீதியையும் படிச்சு முடிங்க! ஆதிக்காடு...
 
 
 அற்புதமாக வளங்கள் நிறைந்த மழைக் காடு. வெளிக் காற்று படாமல் தாங்களுண்டு தங்கள் காடுண்டு என்று அமைதியாய் வாழும் மக்கள். ஆனால் அறுவடை நெருங்கும்போதெல்லாம் கொம்பனின் அட்டகாசம் தாங்காது. கொம்பன்? அந்த மலையை அடிக்கடி அதகளப்படுத்தும் காட்டு யானை. இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க, ஒரு கும்கி யானையை வரவழைத்து கொம்பனை விரட்டலாம் என முடிவு செய்கிறார்கள் ஊர்க்காரர்கள். சந்தர்ப்ப சூழல் காரணமாக, மாணிக்கம் என்ற டூப்ளிகேட் கும்கி, அதன் பாகன் விக்ரம் பிரபுவுடன் ஊருக்குள் நுழைகிறது. தங்களை காக்க வந்த தெய்வமாய் ஊர்மக்கள் அவர்களை வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் வந்த இடத்தில் விக்ரம் பிரபுவுக்கும் ஊர்த் தலைவர் மகள் லட்சுமி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. 
 
காதல் வெளியில் தெரிந்தால் ஊரே ஒன்று சேர்ந்து கொன்றுவிடும். இந்த யானை ஒரிஜினல் கும்கி இல்லை... கோயில் யானை என்பது தெரிந்தாலும் நிலைமை அதேதான். இந்த சூழலை எப்படி சமாளிக்கிறான் ஹீரோ, கொம்பனை எப்படி விரட்டியடிக்கிறது மாணிக்கம் என்பதெல்லாம் க்ளைமாக்ஸில். கதை என்று பிரதானமாக எதுவும் இல்லை. ஆனால் அந்த சூழல் கதையை உருவாக்கியிருக்கிறது. காட்சியமைப்பில்தான் இன்னும் சிரத்தை காட்டாமல், யானை மற்றும் காட்டருவிகளின் பிரமாண்டத்திலேயே மயங்கிப் போய்விட்டார் இயக்குநர். விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை. லட்சுமி மேனன் ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன! தம்பி ராமையாவும் அவருக்கு எடுபிடியாக வரும் அந்த தம்பியும் இல்லாமல் போயிருந்தால் ரொம்ப 'ராவாக' இருந்திருக்கும் இந்தப் படம். ஜோ மல்லூரி, ஜூனியர் பாலையா, அந்த பாரஸ்ட் ரேஞ்சர்கள், மாணிக்கம் யானை... 
 
குறையில்லாத நடிப்பு. க்ளைமாக்ஸில் வந்து அந்த யானை சண்டைக் காட்சியில் கிராபிக்ஸை இன்னும் பக்காவாக செய்திருக்கலாம். எளிதில் அவை கிராபிக்ஸ் என்று தெரிந்துவிடுவதால், ஒரு முழுமை கிடைக்காமல் போகிறது படத்துக்கு. படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் எம் சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும். இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பழைய பாடல்கள் அல்லது ட்யூன்களை நினைவூட்டினாலும் பின்னணி இசையும் ஓகே. படம் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாய் எதையோ எதிர்ப்பார்க்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர். விளைவு, க்ளாமாக்ஸ் நெருங்கும்போதுகூட, ஏதாவது ஒரு அதிர்வை எதிர்நோக்குகிறது மனசு. ஆனால் டைட்டில் ஓட ஆரம்பித்துவிட, அபாரமான ஏமாற்றத்தோடு சீட்டைவிட்டு எழுந்திருக்க வேண்டியதாகிறது. அங்குதான் சறுக்கிவிட்டது கும்கி!
Soruces: oneindia

நீதானே என் பொன்வசந்தம்...

நீதானே என் பொன்வசந்தம்... இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். இளையராஜாவின் இனிய இசை வேறு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால்...? ஜீவாவும் சமந்தாவும் குட்டியூண்டு இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது நட்பும் சண்டையும். அந்த நட்பை 10ம் வகுப்பு படிக்கும்போது மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ப்ளஸ் டூவில் மீண்டும் பிரிகிறார்கள்.
 
 காரணம் பொஸஸிவ்னஸ்.. ஈகோ. ஒரு இடைவெளிக்குப் பிறகு கல்லூரி கலை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காதலுடன் கூடவே வருகிறது இருவரின் ஈகோவும். ஒரு கட்டத்தில் இனி பிரிவே நிரந்தரம் என்று தனித்தனி திசையில் போகிறார்கள். ஜீவாவுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து, தாலிகட்டுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள்... இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். neethane en ponvasantham review மேலும் படங்கள் நிறைய காட்சிகளை ஏற்கெனவே இதே கவுதம் மேனன் படத்தில் பார்த்த நினைவு படம் முழுக்க வந்துபோகிறது, க்ளைமாக்ஸ் தவிர. 
 
போதாக்குறைக்கு விண்ணைத்தாண்டி வருவாயாவை காமெடிக்காக உல்டா பண்ணியிருக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ இசைஞானி இளையராஜாதான். படம் முழுக்க அவரது பாடல்களும் இசையும் நம்முடன் பயணிப்பதால், கவுதம் மேனன் ஜவ்வாய் இழுத்திருக்கும் காட்சிகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது. சற்று முன்பு பார்த்த மேகம்... பாடலும் இசையும் அந்த சூழலும் நம்மை எங்கோ அழைத்துப் போகின்றன. இந்த இசையை, பாடல்களையும்கூட சிலர் விமர்சிக்கும்போது.. மணிவண்ணன் அடிக்கடி சொல்வது போல, 'என்னடா டேஸ்டு உங்க டேஸ்டு' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! சமந்தா... சமீப ஆண்டுகளில் ஒரு நடிகைக்காக படம் பார்க்கலாம் என்று தோன்றியது அநேகமாக இவருக்காகத்தான் இருக்கும். அழகு, நடிப்பு என அனைத்திலும் அசத்துகிறார். ஜீவாவை பல காட்சிகளில் க்ளீன்போல்டாக்குகிறார். நண்பன் பட கேரக்டரின் நீட்சியாகவே படம் முழுக்க தெரிகிறார் ஜீவா. அவரது டல்லடிக்கும் மாடுலேஷன் சில பத்து கொட்டாவிகளுக்கு உத்தரவாதம். அதிலும் தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, அதை சமந்தா மீது சுமத்துவது, 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே' என கமெண்ட் அடிக்க வைக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்கப் போய், அந்தஸ்து பிரச்சினையால் அவமானப்பட்டு வருகிறார் ஜீவாவின் அப்பா. அதன்பிறகு வரும் காட்சிகள் இருக்கிறதே... 'ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தே' என நம்மை நாமே கன்னத்தில் அடித்துக் கொள்ளலாம் போல அத்தனை நாடகத்தனம். ஜீவாவை விட, சில காட்சிகளில் மீசையில்லாமலும் சில காட்சிகளில் மீசையோடும் வரும் சந்தானம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனாலும் கல்லூரி மாணவராக அவரை ஏற்க முடியவில்லை. ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவருமே மகா அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பது படம் முழுக்க தெரிகிறது.
 
ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும், அந்த க்ளாமாக்ஸ் காட்சி, அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தாலி கட்ட 3 மணி நேரமே மிஞ்சியிருக்கும் ஒரு அதிகாலை... அழகிய (முன்னாள்) காதலி... நெஞ்சுக்குள் முட்டித் தவிக்கும் மோகத்தீ... தாங்கள் பழகிய, பாதம் பதித்த இடங்களை கடைசியாய் பார்த்துவர கிளம்புகிறார்கள்... அந்த இரண்டு மணி நேர காதல் தவிப்பை கவுதம் மேனன் படமாக்கியிருக்கும் விதம்... கொள்ளை அழகு. இந்த ரசனையை படம் முழுக்க காட்டியிருந்தால் நீதானே என் பொன்வசந்தத்தை காதலர்கள் கொண்டாடியிருப்பார்கள்!

Soruces : oneindia

கணவர் தற்கொலை; நித்யஸ்ரீ மகாதேவன் தற்கொலை முயற்சி

கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று சென்னை கோட்டூர்புரத்தில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, நித்யஸ்ரீயும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். கணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட நித்யஸ்ரீ விஷத்தை குடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Sources from http://www.dailythanthi.com/node/68808

Monday, December 3, 2012

சிம்புவுடன் ரூமுக்குள்ளிருந்து வந்தாரா லேகா வாஷிங்டன்??


Lekha Refutes Rumour On Her Links W
சென்னை: ஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் ஒன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செல்க்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர் படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின.
அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது.
நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன்.
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.