இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் மற்றும் எமிஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வைத்து பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.
முதற்கட்டமாக, அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர். அமெரிக்காவில் 435 ஏரியாக்களில் மொத்தம் 700 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர். அமெரிக்காவில் இதுவரை எந்த தமிழ் படமும் இவ்வளவு திரையங்குகளில் திரையிடப்பட்டது கிடையாது. ஹாலிவுட் படங்கள் மட்டுமே இவ்வளவு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.
ஆனால், முதன்முறையாக, ஐ படத்தை இவ்வளவு திரையரங்குகளில் திரையிடப்படுவது படத்திற்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.