விஜய் டீவியில் பணிபுரிந்துவந்த சிவகார்த்திகேயனை சினி உலகுக்கு கொண்டுவந்த பெருமை தனுஸையே சேரும். அவரது வ்ளர்ச்சியில் தனுசுக்கு முக்கிய பங்கு இல்லை என்று மறுப்பதற்கில்லை.ஆனால் அதுவே தற்போது அவருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறவேண்டும். ஆம் தனுஷ் தனது சொந்த நிறுவனம் மூலம் வேலையில்லா பட்டதாரி மற்றும் சிவாவை வைத்து டாணா ஆகிய இரு படங்களை தயாரித்து வருகிறர்.
இதில் வேலையில்லா பட்டதாரி படப்பிடிப்பு முடிந்து வியாபாரா வேலையை தொடங்கினார். ஏற்கெனவே தொடர்ந்து ப்ளாப் படங்களை கொடுத்துவரும் தனுசின் இந்த படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. எங்கு சென்றாலும் டாணாவை கொடுத்தால் உங்க படத்தை வாங்கிக்கலாம் என்றே செக் வைத்தனர். எத்தனையே வெற்றிபடங்கள் மற்றும் தேசிய விருது பெற்ற எனக்கே இந்த நிலையா என நொந்துபோனாராம் தனுஷ். இந்த நிலையில் தனுஷின் சிக்கலை அறிந்த சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் பேசினாராம்.மதன் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்பு வேலையில்லா பட்டதாரி படத்தை மதன் வாங்க சம்மதித்தாராம்.
சிவகார்த்திகேயனின் நல்ல மனம் வாழ்க! ஆமாம் இந்த விசயம் தனுசுக்கு தெரியுமா?