Sunday, June 22, 2014

இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு ...

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின் நிஜ முகம் தெரியணுமா... இதோ ஒரு சாம்பிள்... அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில் இருக்கிறது.


 போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம் பேர், இதான் நம்ம நடிகர் வீடு என்று ஆசையுடன் நின்று பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். இது நடிகருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே பங்களாவின் சுற்றுச் சுவர்களை மேலும் ஒரு 5 அடிக்கு உயர்த்தச் சொல்லி உத்தரவிட்டார் நடிகர். அதற்கென 5 தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். 

பங்களாவின் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்களும். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள். காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் தினமும் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணிலேயே படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார். 


வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம்!


Saturday, June 21, 2014

தனுசுக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன் !!

இதுவல்லவோ நட்பு: தனுசுக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்விஜய் டீவியில் பணிபுரிந்துவந்த சிவகார்த்திகேயனை சினி உலகுக்கு கொண்டுவந்த பெருமை தனுஸையே சேரும். அவரது வ்ளர்ச்சியில் தனுசுக்கு முக்கிய பங்கு இல்லை என்று மறுப்பதற்கில்லை.ஆனால் அதுவே தற்போது அவருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறவேண்டும். ஆம் தனுஷ் தனது சொந்த நிறுவனம் மூலம் வேலையில்லா பட்டதாரி மற்றும் சிவாவை வைத்து டாணா ஆகிய இரு படங்களை தயாரித்து வருகிறர். 
 இதில் வேலையில்லா பட்டதாரி படப்பிடிப்பு முடிந்து வியாபாரா வேலையை தொடங்கினார். ஏற்கெனவே தொடர்ந்து ப்ளாப் படங்களை கொடுத்துவரும் தனுசின் இந்த படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. எங்கு சென்றாலும் டாணாவை கொடுத்தால் உங்க படத்தை வாங்கிக்கலாம் என்றே செக் வைத்தனர். எத்தனையே வெற்றிபடங்கள் மற்றும் தேசிய விருது பெற்ற எனக்கே இந்த நிலையா என நொந்துபோனாராம் தனுஷ். இந்த நிலையில் தனுஷின் சிக்கலை அறிந்த சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் பேசினாராம்.மதன் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்பு வேலையில்லா பட்டதாரி படத்தை மதன் வாங்க சம்மதித்தாராம்.
சிவகார்த்திகேயனின் நல்ல மனம் வாழ்க! ஆமாம் இந்த விசயம் தனுசுக்கு தெரியுமா?

Wednesday, June 4, 2014

Tamil Actor Salary List 2014 !!




No: 1 Rajini - 30 Cores


No: 2 Kamal - 25 Cores


No: 3  VIjay - 18 to 20 Cores


No: 3   Ajith Kumar - 18 to 20 Cores


No: 4  Surya    - 18 Cores


No: 5  Vikram   - 12 Cores


No: 6  Karthi - 8 to 10 Cores


No: 7  Dhanush - 8 Cores


No: 7  SImbhu - 8 Cores 


No: 8   Arya  - 4 to 5 Cores


No: 8  Vishal - 4 to 5 Cores


No: 9   Jeeva - 3 cores