சூப்பர்ஸ்டார் ரஜின் 2 ஆண்டுகள் இடைவெளிக்குபின் நடித்து
வெளிவந்திருக்கும் படம் கோச்சடையான்.இப்படம் அனைத்து தரப்பினரையும்
கவர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை பார்த்துவிட்டு படக்
குழுவினரை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் சிம்பு இப்படம் குறித்து
கூறிய விமர்சனம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு சிறுவயதிலிருந்தே சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்று தன்னை கூறிக்கொள்பவர். அதனாலதான் தன் பெயருக்கு முன்னால லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டிக்கொண்டார். வளர்ந்து பிறகு ஒரு கட்டத்தில் அந்த பட்டத்தை ‘யங்
சூப்பர்ஸ்டார்’ஆகவும் மாற்றிகொண்டார். சமீபத்தில் கோச்சடையான்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு தனது ட்டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், ‘கோச்சடையான் பட்டையக் கௌப்பிருச்சு… இந்தப்படத்தை நான் ரொம்ப விரும்பிப் பார்த்தேன். தலைவர் கலக்கிட்டாரு! ஹாலிவுட் பட கிராபிக்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘கோச்சடையான்’ கிராபிக்ஸ் அதற்கு இணையாக இல்லை. ஆனாலும், இந்த அளவு சிறப்பாகச் செய்ததற்காக சௌந்தர்யா ஆர். அஸ்வினுக்கு தலை வணங்குகிறேன். அவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
‘கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை குறிப்பிடப்பட வேண்டியவர்களில் கே.எஸ்.ரவிகுமாரும், ஏ.ஆர்.ரஹ்மானும் முக்கியமானவர்கள். இவர்களின் ஆத்மார்த்தமான வேலை படமெங்கும் தெரிகிறது. ஆண்டனியும் திறமையாகச் செய்திருக்கிறார். வசனங்கள் சூப்பரோ சூப்பர் என்று அதில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
கோச்சடையான் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்று கூறிய சிம்புவின் விமர்சனம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்களை எரிச்சலைய செய்துள்ளது. ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துகொள்ளாத சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்டுவிட்டரில் சிம்புவின் கருத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.