Wednesday, April 23, 2014

அனிருத்தின் அஜீத் படம் கைநழுவிப்போய் விட்டது

3 படத்தில், ஒய் திஸ் கொலவெறி என்ற சூப்பர் ஹிட் பாடலைக்கொடுத்து ஒரே படத்தின் புகழின் உச்சத்துக்கு சென்றவர் இசையமைப்பாளர் அனிருத்.
அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர், இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஜய்யின் கத்தி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் படத்திற்கும் அனிருத்தான் இசையமைப்பதாக இருந்தது. அதனால் ஒரே நேரத்தில் விஜய்-அஜீத் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு தான் இசையமைக்க நேரம் கைகூடி வந்ததால், சில சிறிய பட்ஜெட் படங்களை டீலில் விட்டார்
அனிருத்.

ஆனால், இப்போது பார்த்தால் அஜீத் படம் கைநழுவிப்போய் விட்டது. தனது முதல் படமான மின்னலே தொடங்கி தான் இயக்கிய பல படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்பதால் தீவிரமாக யோசித்த கெளதம்மேனன், அஜீத்துடனான மேலான ஆலோசணைக்குப்பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் தனது படத்திற்கு இசையமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதனால், இனி கோடம்பாக்கமே தனது கையில்தான் என்று தனுஷ்- சிவகார்த்திகேயனுடன் தோள் போட்டுக்கொண்டு திரிந்த அனிருத்துக்கு இது பெரிய ஏமாற்றமாகியுள்ளது. இதையடுத்து, அஜீத் படத்துக்கு நீங்கள்தான் இசையமைப்பதாக சொன்னீர்கள். ஆனால் இப்போது ஹாரிஸ் இசையமைப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டு நச்சரிக்கும் நண்பர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மொபைலையே சுவிட் ஆப் செய்து வைத்து விட்டார் அனிருத்.

Monday, April 14, 2014

விரல் நடிகரும், நயன நடிகையும் ஜோடி சேர்ந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.

விரல் நடிகரும், நயன நடிகையும் ஜோடி சேர்ந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம். 

விரல் நடிகரும் அவரது முன்னாள் காதலியான நயன நடிகையும் பல ஆண்டுகள் கழித்து பாண்டி இயக்குனரின் படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் விரல் நடிகரும் அவருடைய காதலியான புஸு புஸு நடிகையும் பிரிந்ததற்கு நயனம் தான் காரணம் என்றும், அவர் விரைவில் விரல் நடிகரை திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. 


இந்த செய்திகளை கேட்டு நயன நடிகை கடுப்பாகிவிட்டாராம். அம்மா இந்த வதந்தியை எல்லாம் அந்த விரல் நடிகர் வட்டாரம் தாம்மா பரப்புவது என்று நடிகையிடம் அவரது மேனேஜர் கூறினாராம். 


இதையடுத்து விரல் நடிகரின் படத்தை விட்டுவிட்டு தனது நண்பனின் படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம் நடிகை. நடிகரும் மேனன் இயக்கத்தில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறாராம். ஆக ஆளு படம் டீலில் விடப்பட்டுள்ளதாம்.


Saturday, April 12, 2014

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த படம் மான் கராத்தே.

இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் சுமார் 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

மான் கராத்தே படத்துக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தனவாம்.

இப்படி அதிக வசூலை தட்டிச் சென்ற மாக் கராத்தே படம் ஆறு நாட்கள் கழிந்த நிலையில் பல தியேட்டர்களில் மான் கராத்தே படத்தின் வசூல் சரிந்துள்ளதாம்.

50 முதல் 100 வரை மட்டுமே ரசிகர்கள் வருவதால் படத்தை எடுத்துவிட்டு நான் சிகப்பு மனிதன் படத்தை திரையிட உள்ளார்களாம்.
இந்த செய்தி பட தயாரிப்பாளர்களை மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்

Tuesday, April 8, 2014

லட்சுமி மேனன் ஓட்டம் !


கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். கும்கி படம் வெற்றியை தொடர்ந்து தமிழில் பிஸியானதால் அவரது தாய்மொழியான மலையாள பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.

இந்தநிலையில் விஷாலுடன் நடித்து வெளிவர உள்ள நான் சிகப்பு மனிதனில் படத்தில் உதட்டு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதுமட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் யாருடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று கூறினார். ஆனால் தற்போது அப்படி கூறியது தவறு என நினைக்கிறாராம்.

இனி தமிழில் படத்துக்குப்படம் உதட்டு முத்தக்காடசி வைத்து தனது உதட்டை புண்ணாக்கி விடுவார்கள் என்கிற பயம் அவருக்கு வந்துவிட்டதாம். அதனால் இந்த உதட்டு முத்தம் பரபரப்பு அடங்கும் வரை மலையாள பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறாராம்.

 இவர் தற்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் நடிக்கும் அவதாரம் என்ற படத்தில் நடிக்கிறாராம். முத்த சர்ச்சை தீரும்வரை இனி மலையாள படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் லட்சுமி மேனன்.

Monday, April 7, 2014

Vijay sethupathi "A Hardworking Performer"

PhotoVijay sethupathi "A Hardworking Performer"

Vijay Sethupathi Acted In 6 Movies As Uncredited Small Roles
1 . M. Kumaran S/O Mahalakshmi (Uncredited Role) - 2004
2 . Pudhupettai (Uncredited Role) - 2006
3 . Lee (Uncredited Role) - 2007
4 . Vennila Kabadi Kuzhu (Uncredited Role) - 2009
5 . Naan Mahaan Alla (First Credited Mini Role) - 2010
6 . Bale Pandiya (Uncredited Role) - 2010



After 6 Years Of Struggle He Got Chance To Lead A Movie As a Hero
1 . Thenmerku Paruvakaatru - 2010 - Failed In Box Office (Below Average) - But Appreciated By Many And Won Few Awards
2 . Varnam - 2010 - Disaster In Box Office (Flop) - But Appreciated By Few Movie Viewers Whom Watched The Movie And Played In 4+ Film Festivals
3 . Sundarapandian - 2012 - Blockbuster In Box Office (Blockbuster) - After 1 Year Gap Vijay Sethupathi Bounce Backed As A Villian In This Flick Well Received In Box Office & Audience , And This Film Puts Full Stop To His Box Office Failures
4 . Pizza - 2012 - Blockbuster In Box Office (Blockbuster) - The Real Turning Point Of His Carrier , His Script Selection And Best Performance Well Reached To All Audience , Everyone Appreciated This Movie & Won Many Awards On 2012
5 . Naduvula Konjam Pakkatha Kaanom - 2012 - Super Hit In Box Office (Super Hit) - Once Again Vijay Sethupathi Popularity Increased Because Of This Movie Success And His Performance After This Film Everyone Started Appreciating His Performance & Won Some Awards Too
6 . Soodhu Kavvum - 2013 - Blockbuster In Box Office (Blockbuster) - Vijay Sethupathi Strikes Gold , This Movie Made Vijay Sethupathi As a Real Vasool Chakravathi Of Small Budget Films , His Performance , Script Selection , Box Office , Continues Hits , Everything Went Viral And Everyone Started Taking Vijay Sethupathi As Hero To The Elevating The Next Big Level Hero
7 . Idharkuthane Aasaipattai Balakumara - 2013 - Hit In Box Office (Semi Hit) - This Movie Not Really Upto Vijay Sethupathi Fans Expectations But Still His Comical Role , Dialogues , Continues Hits Made This Movie As Box Office Hit With Decent Collections
8 . Rummy - 2014 - Flopped In Box Office (Flop) - Bad Script Selection Shows The Result , His Performance Was Good But Really He Failed To Deliver The Hit Content This Time
9 . Pannaiyarum Padminiyum - 2014 - Average Grosser (Average) - Performance Film , Everyone Appreciated This Film But Bad Release Time Made This Movie As A Just Average Grosser , But Excpecting Lot Of Awards For This Film
As Of Now "Vijay Sethupathi" Has Earned Good Name With Audience But His Market Getting Down Bcoz Of Last Few Films , He Badly Need One Blockbuster To Get His Role Back
His Upcoming Films - 10.Mellisai , 11.Vasantha Kumaran , 12.Kathai Thiraikathai Vasanam Iyakkam , 13.Purampokku , 14.Idam Porul Eval

We Wish Vijay Sethupathi To Taste More Success On Box Office With His Future Projects

அமலாபால் - விஜய்க்கு திடீர் டும் டும் டும்

சினிமா வட்டாரத்தில் இயகுனர்களுடன்   நடிகைகள் காதல் வசப்படுவது ஒன்றும்  புதிதல்ல. ஆனால் அந்த காதல் கல்யாணத்தில் முடிகிறதா என்பது தான் கேள்வி குறி ?

இயக்குனர்கள் கதாநாயகிகளை கரம் பிடிப்பது சினிமாவில் அதிகம். உதாரணத்துக்கு மணிரத்னம் - சுஹாசினி, பிரியதர்ஷன்-லிஸ்ஸி மற்றும் லேட்டஸ்ட்டாக மூடர்கூடம் நவீன்- சிந்து வரை லிஸ்ட் இருக்கு.
அந்த வரிசையில் கூடிய விரைவில் இணைய போகும் ஜோடி-இயக்குனர் ஏ.எல்.விஜய்- அமலபால்.

‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகனும்கூட. இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே இருந்தனர்.
இதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக, தான் இயக்கும் படங்களில் அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். இந்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக செய்தி உலாவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் விஜய்யின் ‘சைவம்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட நடிகர் பார்த்திபன் நாசுக்காக அவர்களின் காதலை பற்றி தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தத்தில் இந்த வடையும்(அமலாபால்) போச்சா?

ராஜபக்‌ஷேவின் கூட்டாளி படத்தில் விஜய்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான படம் ‘இனம்’ என்கிற சர்ச்சையே இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அடங்க ஆரம்பித்திருக்கிற நிலையில் இப்போது அதேபோல ஒரு சர்ச்சையில் வசமாக மாட்டியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’.


‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா இண்டர்நேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் கூட்டாளி என்பது தான் சர்ச்சைக்கான காரணம். அங்கு லைக்கா மொபைல் என்கிற செல்போன் சேவையை நடத்தி வரும் சுபாஷ்கரன் தான் கத்தி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர். இந்த உண்மைத் தகவல் தற்போது வெளியானதையடுத்து பணத்துக்காக இனக் கொலையாளி ராஜபக்‌ஷேவின் கூட்டாளி படத்தில் பச்சைத் தமிழர் விஜய் நடிக்கலாமா..? என பல நாடுகளிலும் தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘கத்தி’ படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் முதலில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் பெருசு என்பதால் அதைத் தாங்க முடியாத ஐயங்கரன் இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத்தயாரிப்பில் இணைத்தது. இது ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

ஆனால் நடிகர் விஜய்யோ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் சொல்லாமல் வழக்கம் போல அமைதியாக இருந்து வருகிறார்.

அப்புறம் என்ன இன்னொரு ரிலீஸ் களேபரத்துக்கு தயாராக வேண்டியது தான்.

Thursday, April 3, 2014

Lakshmi menon's expressions !!

காதலிக்கிறேன் ஆனால் காதலன் யாரென்று சொல்ல மாட்டேன்! -சமந்தா

தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார்.
அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் இந்த விசயத்தில் சமந்தா சில சமயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்படி அவரிடம சமீபத்தில் காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால், நான் காதலிக்கும் நபரை மட்டும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், எனக்கு ரொம்ப பிடித்தமானவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் தெலுங்கு டைரக்டர் திரி விக்ரம்.
அதற்காக இவர்களில் ஒருவர்தான் உங்கள் காதலரா? என்று கேட்காதீர்கள்.
அதற்கு எனனிடம் பதில் இல்லை என்று கூறியுள்ள சமந்தா, இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே யோசிப்பாராம். அதுவரைக்கும் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்குமாம்.

600 தியேட்டர்களில் மான்கராத்தே ரிலீஸ்!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை.
எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட படம் நான்கு மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 4ந் தேதி படம் ரிலீசாகிறது.
தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. சென்னை நகரில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீசாகிறது. உலக நாடுகளில் 160 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. தென்னிந்திய மாநிலங்களையும் சேர்த்தால் மொத்தம் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
வளர்ந்து வரும் ஒரு புதுமுக நடிகரின் படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதன் முறை என்கிறார்கள். ரிலீசுக்கு பிறகு கூடுதல் பிரிண்டுகள் தேவைப்பட்டால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்களாம்.