சென்னை: கேவி ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிக்கும் புதிய படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வதந்தி என கேவி ஆனந்த் மறுத்துள்ளார். ஈராஸ் இன்டர்நேஷனலுக்காக ஏற்கெனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படம் தொடங்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது. ரஜினி உடல்நிலை குணமடைந்து வந்த பிறகு கோச்சடையான் தொடங்கப்பட்டது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது. இந்த நிலையில், கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்தன. இந்தப் படத்தை கே வி ஆனந்த் இயக்குகிறார், ஏஜிஎஸ் தயாரிக்கிறது.. அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அந்தப் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது என்ற தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்தை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் ராணாவும் கோச்சடையானும் தயாரிப்பில் உள்ளன. அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். பெயர், நடிகர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ரஜினியின் படம். எனவே ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கும்," என்று கூறியுள்ளார். கேவி ஆனந்த் ரஜினியுடன் சிவாஜியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 'மாற்றானுக்குப் பிறகு ரஜினிக்காக கதை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் கேவி ஆனந்த். கோச்சடையான் வெளியாகும் முன்பே இந்த புதிய பட அறிவிப்பு வரக்கூடும்,' என்கிறார்கள். மறுக்கும் கேவி ஆனந்த் ஆனால் இந்த செய்தி குறித்து ட்விட்டரில், மறுப்பு தெரிவித்துள்ளார் கேவி ஆனந்த். "என்னுடைய ‘மாற்றான்' போய் கையெழுத்திட்டிருந்தால்தான் இது சாத்தியம். இப்போது கதையை உருவாக்குவதில்தான் தீவிரமாக உள்ளேன். மற்றபடி இப்போதைக்கு எல்லாமே வதந்திதான்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/eros-produce-rajinikanth-s-next-movie-170440.html