Wednesday, March 26, 2014

சிம்பு – நயன்தாரா கல்யாணமா?

சிம்புவும், நயன்தாராவும் திடீர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.


‘வல்லவன்’படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்ட இவர்கள் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது.

இந்த நிலையில் சிம்புவும், நயன்தாராவும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்துக் கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பின் போது சிம்புவும் நயன்தாராவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாயின.

தற்போது சிம்புவும் நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் மறுபக்கம் பட விளம்பரத்துக்காக திருமணம் நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகின்றன.

ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.
திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரியவரும்.

மலேசியா வாய்திறக்காத விமானம் மூழ்கியதற்கான ஆதாரம் !

மலேசியா வாய்திறக்காத விமானம் மூழ்கியதற்கான ஆதாரம் ! அமெரிக்காவில் லீக் ஆனது...
"விமானம் மூழ்கிவிட்டது”என கிளைமேக்ஸ் இல்லாமலே படத்தை முடித்துக்கொண்ட மலேசியாவுக்கு இதனை அறிவிக்க சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், “விமானம் மூழ்கிவிட்டது” என்று மட்டும் அறிவித்தது.அதை எப்படி கண்டுபிடித்தோம் என்று வாய்திறக்கவில்லை.
அதையடுத்து சீன அரசு ஆதாரம் கேட்டது, பயணிகளின் உறவினர்கள் கேட்டார்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவும், “மலேசியா என்ன ஆதாரம் வைத்திருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்” என்றது. இதையடுத்து மலேசியா தாம் அதுவரை பொத்திக் காத்து வைத்திருந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு காட்ட.. .. ஆதாரம் அமெரிக்காவில் லீக் ஆகிவிட்டது.
மலேசிய விமானம் ரேடியோ தொடர்பை இழந்த பின்னரும், ‘பிங்கிங்’ தொடர்பை வைத்திருந்தது
இந்த பிங்கிங் என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், விமானமும், சாட்டலைட்டும் மணிக்கொரு தடவை கைகுலுக்கி கொள்ளும் நடைமுறை. அதாவது, மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்ளும்.
மலேசிய விமானம் காணாமல் போன பின்னரும் சில மணி நேரத்துக்கு இந்த ‘பிங்கிங்’ நடந்திருக்கிறது. மணிக்கொரு தடவை அது பதிவாகியும் உள்ளது. அந்தப் பதிவுகளை ஆராய்ந்தபோது, அவற்றில் ஒரு ‘முற்றுப்பெறாத பிங்’ (partial ping) இருந்ததை கண்டிருக்கிறார்கள்.
இதன் அர்த்தம் அப்போது புரிந்து கொள்ளப்படவில்லை.
அதன்பின் விமானம் மாயமாகி வாரக்கணக்கில் மர்மம் நீடிக்கவே, இந்த ‘முற்றுப்பெறாத பிங்’ பற்றி சற்றே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான், அது வெறும் ‘முற்றுப்பெறாத பிங்’ மட்டுமல்ல, ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ (a failed login) என்பதை புரிந்து கொண்டார்கள்.
அதாவது, விமானத்தில் உள்ள சிஸ்டம், சாட்டலைட்டுடன் பிங் பண்ண முயன்று தோற்றது.
அதையடுத்து, அதுவரை பதிவாகிய பிங்குகள் அனைத்தையும் மீண்டும் செக் பண்ணியிருக்கிறார்கள். அவை சரியாக 1 மணி நேர இடைவெளியில் பிங் ஆகியுள்ளன. விமானம் ரேடியோ தொடர்பை இழந்தபின் அப்படி சரியாக 6 பிங்குகள் உள்ளன. இந்த அரைகுறை பிங், ஏழாவது.
அப்போது மற்றொரு விஷயத்தை கவனித்தனர். 6-வது பிங்குக்கும், இந்த 7-வது பிங்குக்கும் இடையே 1 மணி நேரம் இல்லை.
6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் 7-வது அரைகுறை பிங் முயற்சி நடந்திருக்கிறது.
அதன் அர்த்தம் என்னவென்றால், 6-வது பிங் முடிந்து 8-வது நிமிடத்தில், விமானத்தின் சிஸ்டம் உருக்குலைந்திருக்கிறது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிஸ்டம் ரீசெட் பண்ண தாமாகவே முயன்றிருக்கிறது (system to reset itself). ஆனால், ரீசெட் பண்ண முடியவில்லை. அதனால்தான் ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ பதிவாகியது.
இதன்பின் எந்தவொரு பிங்கிங்கும் நடைபெறவில்லை!
இதனால், 6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் விமானம் தண்ணீரில் மூழ்கியது என்ற ஊகத்துக்கு வந்துள்ளார்கள்.ஏன் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? தரையில் வீழ்ந்திருக்க முடியாதா?
முடியாது. காரணம், இவர்களது கணிப்பின்படி, 6-வது பிங் இந்தியக் கடலின் தென்பகுதியில் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து 8 நிமிடங்களில் தரைக்கு போக முடியாது. எனவே தண்ணீரில் மூழ்கியது என முடிவு செய்தார்கள்.

Tuesday, March 25, 2014

Awesome Story Must Read. . . .

Awesome Story Must Read. . . .

Husband comes home drunk and breaks some crockery,
vomits and falls down on the floor...
Wife pulls him up and cleans everything.

Next day wen he gets up he expects her to be really angry wid him....
He prays that they shouldd not have a
fight..
He finds a note near the table...

"Honey..your favourite breakfast is ready on the table,
i had to leave early to buy grocery...
i'll come running back to you, my love.
I love you. ...

He gets surprised and asks his son..,
'what happened last night..?

Son told...,"

when mom pulled you to bed and tried
removing your boots and shirt..
you were dead drunk and you said......

" Hey Lady ! Leave Me Alone...
I M Married !!!

Thats True Love...
its all crazy:))

ஆர்யா, அமலாபால் திடீர் திருமணத்தால் பெரும் பரபரப்பு!

கோவை:-கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார். ஆம். இந்த திருமண காட்சி அவர் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது.


நிஜ திருமணம் போலவே மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, திருமண மேடை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆர்யா பட்டுவேட்டியும், பட்டு சட்டையும் அணிந்து மணமகன் இடத்திலும் அமலாபால் பச்சைநிற பட்டு சேலை உடுத்தி மணமகள் இடத்திலும் உட்கார்ந்தனர். பின்னர் கெட்டி மேளம் முழங்க அமலாபால் கழுத்தில் தாலி கட்டினார் ஆர்யா. இந்த காட்சியை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் மிகச்சிறப்பாக படமாக்கினார். இந்த படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்கு பொதுமக்கள் குவிந்திருந்ததால் மண்டபத்தின் வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பார்த்திபன். அவரே இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் கெளரவ தோற்றத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.சந்திரமோகன் தயாரிக்கின்றார்.

Friday, March 21, 2014

குக்கூ - திரை விமர்சனம் !!

குக்கூ - திரை விமர்சனம் !!
பார்வையற்ற நாயகன், நாயகியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இந்த குக்கூ. இந்த கதை களத்தை மையமாக வைத்து இதைவிட அழகாக வேறு யாராலும் திரைப்படம் எடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
சரி வாங்க கதைக்குள் போவோம்......
படத்தில் பார்வையற்ற நாயகன், நாயகியாக வருகிறார்கள், அட்டகத்தி தினேஷும்(தமிழ்), மாலவிக்காவும்(சுதந்திரக்கொடி). இவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மோதல்கள் காதலாக மாறுகிறது.
 
கண்களிருக்கும் மனிதர்களின் காதலுக்கு ஆயிரம் தடைகள்.. பிரச்சினைகள். அதை பல படங்களில் பார்த்தும்விட்டோம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரின் காதலுக்கு வரும் சோதனைகள்... அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை மனம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் ராஜூ முருகன். வெறும் பொழுதுபோக்கு, குத்துப் பாட்டு, கேவலமான காமெடியெல்லாம் ஏதுமில்லாத அழகான படமாக வந்திருக்கிறது குக்கூ. அன்பின் வலிமை அன்பானவர்களை ஒன்று சேர்க்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். 

படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் தமிழுக்கும் கொடிக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ... எங்காவது மோதிக் கொள்வார்களோ.. அந்த வாகனம் இடித்துவிடுமோ என பதறுகிறது மனசு. பார்வையில்லாதவர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் எள்ளலை, அவர்களின் சந்தோஷங்களை இத்தனை இயல்பாக, அதே நேரம் பிரச்சார தொனியில்லாமல் யாரும் சொன்னதில்லை. பார்வையில்லாத ஒரு காதலியும், காதலனும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருவேறு திக்கில் பிரிந்து போன பிறகு.. மீண்டும் சேர்வதில் உள்ள சிக்கலை யோசித்துப் பார்த்தால்... ஏ யப்பா... எவ்வளவு பெரிய துயர் இது! ரயிலில் பொருள்கள் விற்கும், அவ்வப்போது இளையராஜா குரலில் கச்சேரிகளில் பாடும் பார்வையற்ற இளைஞர் தமிழ் (தினேஷ்). ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் பார்வையற்ற பெண் சுதந்திரக் கொடி (மாளவிகா நாயர்). இருவரின் சந்திப்பும் மோதலில் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாகிறது. ஆனால் கொடியின் அண்ணன், தங்கையை வேலையில் சேர்ப்பதற்காக தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்த தன் நண்பனுக்கே அவளை திருமணம் செய்து வைக்க முயல்கிறான். 


கொடி கடுமையாக எதிர்த்துப் போராடுகிறாள். காதல் விஷயம் தெரிந்ததும் தமிழை அடித்துப் போடுகிறான் கொடியின் அண்ணன். வேலைக்காக கடன் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிட்டு தன்னை அண்ணன் பிடியிலிருந்து அழைத்துப் போகுமாறு தமிழிடம் சொல்கிறாள் கொடி. அங்கே இங்கே என பணத்தைப் புரட்டி கொடியைச் சந்திக்க கிளம்புகிறான் தமிழ். ஆனால் இரவில் ரகசியமாக கொடிக்கு திருமண ஏற்பாடு செய்கிறான் அண்ணன். அவர்களின் பிடியிலிருந்து தப்புகிறாள் கொடி. பணத்தோடு வந்த தமிழோ போலீசில் சிக்கி, அதிலிருந்து தப்பி விபத்தில் அடிபட்டு பணத்தையும் இழந்து மரணத்தோடு போராடுகிறான். இருவரும் மீண்டும் சந்திக்கிறார்களா.. அந்தக் காதல் கைகூடியதா என்பது மீதிக் கதை. படத்தின் இயக்குநர் ராஜூ முருகன்தான் கதையைத் தொடங்குகிறார். தமிழுக்கும், சுதந்திரக் கொடிக்கும் இடையிலான காதல் என்ன ஆனது என்ற அவரது தேடல்தான் படமாக விரிகிறது. பார்வையற்ற நாயகர்கள் வேடத்தில் இதற்கு முன் நடித்த கமல், விக்ரமையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் தினேஷ். குறிப்பாக அவரது உடல்மொழி. தன் காதலி எதிரில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்லும்போது அந்தக் கோபம்..


 காதலி சமாதானமானதும் மகிழ்ச்சியைக் காட்டும் விதம்...சினிமா 'கேட்க' தியேட்டருக்குப் போய் பண்ணும் நக்கல்ஸ்... எல்லாவற்றிலும் ஒரு உண்மையான மாற்றுத் திறனாளியை நகலெடுத்திருக்கிறார் தினேஷ். வெல்டன். காதலியாக வரும் மாளவிகாவும் பிரமிக்க வைக்கிறார். இவரா புதுமுகம் என கேட்க வைக்கிறது அவர் நடிப்பு... அத்தனை கச்சிதம். அதுவும் அவர் சர்ச்சிலிருந்து தப்பித்து, தட்டுத் தடுமாறி நெடுஞ்சாலைக்கு அருகில் வந்தபிறகு பேய்த்தனமாக கடந்துபோகும் வாகனங்களின் வேகத்தை உணர்ந்து அலறிப் பின் வாங்கி நின்று தடுமாறும் போது மனம் படும் வேதனை கொஞ்சமல்ல. அந்த நாடகக் கோஷ்டியில் வரும் எம்ஜிஆர், சந்திரபாபு எல்லாருமே சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பு. முக்கியமாக எம்ஜிஆராக வருபவர் குணத்திலும் அவரது கொடையுள்ளத்தை வெளிப்படுத்தும் காட்சி! ஆடுகளம் முருகதாஸ், தினேஷின் பார்வையற்ற நண்பனாக வருபவர், ஆடுகளம் முருகதாஸ் என நடித்த அனைவருமே இயல் மீறாமல் நடித்துள்ளனர். படத்தில் குறைகள் என்று சொல்ல கொஞ்சமல்ல.. நிறையவே இருக்கிறது. பிறவிப் பார்வையற்ற நாயகி தனக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்பது எப்படி எனப் புரியவில்லை.


 மூன்று லட்ச ரூபாய் என்பது நாயகனின் நிலைமைக்கு மிகப் பெரிய பணம். பெரும்பாடுபட்டு அந்தப் பணத்தைப் புரட்டும் அவன், அத்தனை நண்பர்கள் துணையிருந்தும் பிரச்சினையுள்ள ஒரு இடத்துக்குத் தனியாகப் போவது ஏன்? வந்து பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லும் பார்வையுள்ள நண்பன் எங்கே போனான்? நாயகனும் நாயகியும் பரஸ்பரம் தங்கள் வாசனையை உணர்ந்தவர்கள். பத்தடி தூரத்திலிருக்கும்போதே தன் காதலன் வாசம் புரிந்து கொள்பவள் நாயகி. ஒரு வேனில் தனக்கு மிக அருகில் அடிபட்டு படுத்துக் கிடக்கும் காதலனை நாயகி உணர்ந்து கொள்ளாமல் போவது எப்படி? அந்த புனே ரயில் நிலையக் காட்சி. பார்ப்பவர் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட மாதிரி தெரிகிறது. 


ஆனாலும், ராஜூ முருகன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது என்றே சொல்லலாம்! படத்துக்கு இசை இளையராஜா என்று போட்டிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அப்படி ஒரு பாதிப்பு. நாயகன் இளையராஜா குரலில் பாடுபவன் என்பதால், ராஜாவின் பாடல்கள் பின்னணி இசையாக ஒலிப்பதைக் கேட்கவே அத்தனை சுகமாக உள்ளது. மனசில சூறைக்காத்தே... மனசில் நிற்கிறது. இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்... என்பதையெல்லாம் யோசிக்காமல், எந்த மனிதருக்கும் காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில் பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன் முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை வாழ்த்தி வரவேற்போம்!