Sunday, September 25, 2011

கல்யாணமாகலைன்னு எத்தனை முறைதான் சொல்வது- ஜெனிலியா எரிச்சல்


எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்னும் எத்தனை முறை தான் சொல்வதோ என்று நடிகை ஜெனிலியா கடுப்பாகியுள்ளார்.

நடிகை ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் அதை ஜெனிலியா மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. 
இது குறித்து ஜெனிலியா கூறியதாவது,   Genelia

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தான் திருமணம் செய்வேன். கடந்த 5 வருடங்களாக எனது திருமணத்தைப் பற்றியே பேசுகிறார்கள். என் தனிப்பட்ட வாழக்கையில் அப்படி என்ன தான் அக்கறையோ. நானும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தயவு செய்து இனிமேல் எனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசாதீர்கள். இதனால் என் குடும்பத்திலும், ரித்தேஷ் குடும்பத்திலும் சலசலப்பு ஏற்படுகின்றது. நானும் ரித்தேஷும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறொன்றுமில்லை என்றார்.

இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள், 2012-ல் திருமணம் என்றார்களே. அப்போ அது அவ்வளவு தானா?


இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா

'தல' அஜித் குமாரின் 50-வது படமான மங்காத்தா இங்கிலாந்தில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடித்த படம் மங்காத்தா தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கிலாந்திலும் மங்காத்தா சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தில் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து இது வரை ரூ. 1. 24 கோடி வசூல் ஆகியுள்ளது. இன்னமும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் மட்டுமில்லை சிங்கப்பூர், மலேசியா, அமெரி்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் ரீலீஸ் ஆன முதல் வார இறுதியில் மங்காத்தா பாக்ஸ் ஆபீசில் 15-வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் சல்மானின் பாடிகார்டும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மங்காத்தாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 40 கோடியைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தை திருமணத்தை கைவிட்ட 5 பெண்களை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட பாக். கிராமம்


பஞ்சாப் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் குழந்தைகளாக இருக்கும்போது கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட 5 இளம்பெண்கள் தற்போது திருமண பந்தத்தில் இருக்க மறுத்ததால் அவர்களை ஊரைவிட்டுத் தள்ளி வைத்துள்ளனர். மீறி ஊருக்குள் வந்தால் கற்பழிக்கவோ, கொலை செய்யவோப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்பகுதிகளில் பொதுவாக பஞ்சாயத்து தலைவர்கள்தான் ( நம் ஊர் நாட்டாமை போல) மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது வழக்கம். அவர்களின் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட சில வழக்குகள் மட்டுமே போலீசாரிடமும், நீதிமன்றத்திற்கும் செல்லும்.

இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டும் அவர்களுக்கு 6 முதல் 13 வயது இருக்கும் போது முல்லா என்பவரது படிப்பறிவில்லாத மகன்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. கிராம நிர்வாகிகளின் முன்னிலையில் துப்பாக்கி முனையில் இந்த திருமணம் நடந்தது.

அப்போது தனது மகளின் திருமணத்திற்கு மறுத்த சிறுமிகள் ஒருவரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது அந்த 5 இளம்பெண்களும் தங்களை கட்டாயப்படுத்தி செய்த குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இது குறித்த புகார் கிராமத்து தலைவர்களிடம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த நாட்டாமை குழு, கிராமத் தலைவர்களையும், கிராமத்தின் சட்டத்தையும் மதிக்காத அந்த 5 பெண்களையும் கிராமத்தை விட்டு தள்ளி வைத்தனர். மேலும் அவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Friday, September 23, 2011

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்


Ajith Kumarசொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.

என் சாவுக்கு கூடும் கூட்டம்....

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.


7am Arivu story revealed



போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!

காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!

முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு.

தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!

Thursday, September 22, 2011

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்


Ajith

மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத். 

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

நெனச்ச டிரஸ் போடமுடியலையே: தமன்னா கவலை


Tamanna
படத்தில் நடிக்கையில் இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டியிருக்கிறது. அதனால் தான் நினைத்தபடி உடைகள் அணிய முடியவில்லை என்று நடிகை தமன்னா கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து தமன்னா கூறியதாவது,

நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே நிறைய படங்கள் பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். கல்லூரிக் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் க்லலூரிக்கு சென்று படித்ததில்லை. நான் நடிக்கும் படத்தில் குறைந்தது ஒரு காட்சியாவது கல்லூரி பின்னணியில் இருக்குமா என்று தான் எதிர்பார்ப்பேன்.

உடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். கதாநாயகியாக நடிக்கையில் நான் நினைத்த உடைகளை அணிந்து நடிக்க ஆசைப்படுவேன். ஆனால் காட்சி, லைட, கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டும். நினைத்தபடி உடை அணிய முடியாதது ஏதோ தடைவிதித்தது போன்று இருக்கும். அதனால் வருத்தப்படுவேன்.

ஆனால் ஷூட்டிங் இல்லையென்றால் நான் இஷ்டப்பட்ட உடைகளைத் தான் அணிவேன். எனக்கு லைட் கலர் உடைகள் தான் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

ரசிகர்களுக்கு பிரைட் தமன்னாவைத்தான் பிடிக்கிறதாம்...